அரசு அதிகாரிகள் கூட்டத்தில் ஓடிய ஆபாச படம்! யாரு பார்த்த வேலைடா இது!

0
327

அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் திடீரென ஆபாச படம் ஓடிய சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைமை செயலகத்தில் உணவு மற்றும் பொதுவினியோகத்துறை துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அதோடு, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் 33 மாவட்டங்களை சேர்ந்த பல அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

அரசு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு எவ்வளவு துரிதமாக சென்று சேர வேண்டும் என உள்துறை செயலாளர் முக்தா சிங் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென திரையில் சில நிமிடங்கள் ஆபாச திரைப்படம் ஓடியது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியாகி முகம் சுளித்தனர். சிலர் கூச்சத்தில் நெளிந்தனர்.

உடனே வீடியோ நிறுத்தபட்டு தொழில் நுட்ப பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்ந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் மாநில உள்துறை செயலாளர் முக்தா சிங் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதமிழீழ விடுதலைப் புலிகள் அமைத்த பெருந்தோட்டத்துக்கு ஆபத்து!
Next articleஉங்கள் வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டால் இனி பயப்பட வேண்டாம்! இதை செய்தால் போதும்!