அமெரிக்கா சீனா மீது வழக்கு!

0

அமெரிக்கா சீனா மீது வழக்கு!

கொரோனா எனும் உயிர் கொல்லும் ஆயுதத்தை (பயோ வெப்பன்) திட்டமிட்டுப் பரப்பியதற்காக சீன அரசு , 20 டிரில்லியன் டாலர்களை நஷ்டஈடாக வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்து , அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனாவின் பிறப்பிடம் சீனாவிலுள்ள வூஹான் என்ற நகரில் உள்ள மிகப் பெரிய ‘வைரலாஜி’ ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கும் என, உலக நாடுகள் சந்தேகம் தெரிவித்தன.

ஆனால் சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் அமெரிக்காவின் ராணுவ வீரர்கள்தான், வூஹானில் கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்தனர் என்று குற்றம்சாட்டினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அந்த நாட்டை சாடினார்.இப்படி இரு நாடுகளும் மாறி மாறி, தங்களது நாட்டில் பணியாற்றும் எதிரி நாட்டின் பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றின. இதை தொடர்ந்து அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில், வாஷிங்டனைச் சேர்ந்த ப்ரீடம் வாட்ச் வழக்கறிஞர்கள் குழுவும், அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேனும் இணைந்து, சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅப்பாவான ஜிவி பிரகாஷ்!
Next articleசமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்.