அமெரிக்காவில் இரு கருப்பினத்தவர் மரணம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..!

0
914

அமெரிக்காவில் இரு கருப்பினத்தவர் மரணம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..!

அமெரிக்காவில் இரு கருப்பினத்தவர் மரணம் தொடர்பாக பெருநடுவர் குழுக்களின் தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டின் பர்க்லீ நகரில் மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.

அமெரிக்காவில் பெர்குஸன் நகரில் மைக்கேல் பிரௌன்(18) என்ற கருப்பின இளைஞரை காவலர் டாரென் வில்ஸன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சுட்டுக் கொன்றுள்ளார். இது தொடர்பான விசாரணையில் பெருநடுவர் குழு காவலர் டாரென் வில்ஸன் மீது நீதிமன்ற விசாரணை தேவையில்லை என தீர்ப்பளித்தது.

அடுத்து நியூயார்க் நகரில் கருப்பினத்தை சேர்ந்த எரிக் கார்னர்(43) என்பவரை போலீசார் கைது செய்ய முயற்சித்த போது டேனியல் பன்டாலியோ என்ற காவலர் எரிக் கார்னரின் கழுத்தை இறுக்கி பிடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான‌ விசாரணையிலும் பெருநடுவர் குழு காவலர் டேனியல் பன்டாலியோ மீது குற்ற விசாரணை எதுவும் தேவையில்லை என்று கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

இந்த இரு தீர்ப்புகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனம் தெரிவித்து சாலை மறியலிலும், ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். பர்க்லீ, ஆக்லாந்து ஆகிய நகரங்களில் கலவரங்கள் இன்னும் ஓயவில்லை.

இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் பேசிய போது இவர்களுடைய மரணத்தில் சிவில் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நீதித்துறையை கேட்டுக்கொண்டுள்வதாகவும் போராட்டம் என்ற பெயரில் கலவரங்களை உண்டுபண்ணி போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும், இதை அனுமதிக்ககூடாது, எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் போராட்டக்காரர்களின் அராஜகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் ராணுவம் தயாராகவுள்ளது அராஜகம் தொடர்ந்தால் துப்பாக்கிச்சூடு நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: