அப்பாவான ஜிவி பிரகாஷ்!

0

அப்பாவான ஜிவி பிரகாஷ்!

தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் சைந்தவி தம்பதியினருக்கு நேற்று குழந்தை பிறந்துள்ளது.

2013 ஆம் ஆண்டு பின்னணி பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் பின்னா் இருவரும் சேர்ந்து பாடல்களை பாடிவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் ஜிவி பிரகாஷ் தம்பதியினருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசாமை பயன்கள் – Samai Benefits in Tamil (Little Millet)சாமை Samai Payangal Samai uses in Tamil Panicum sumatrense
Next articleஅமெரிக்கா சீனா மீது வழக்கு!