அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நடிகை அனிகா வெளியிட்டுள்ள காணொளி.

0
262

அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நடிகை அனிகா வெளியிட்டுள்ள காணொளி.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபலமாக உள்ளவர் நடிகை அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தன் மூலம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர்.

இதன் மூலம் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. பின்னர் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இவரது அதிகப்படியான நடிப்பு ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி குட்டி நயன்தாராவாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

மேலும் இவர் நானும் ரவுடி தான், மிருதன், பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் லைவ் சாட்டில் ஈடுபட்ட போது ரசிகர் ஒருவர், உங்களுடைய தீவிர ரசிகர் உங்களை காதலிப்பதாக கூறி, பின்னர் நீங்கள் காதலை ஏற்கவில்லை கூறியதால் த.ற்.கொ.லை செய்துகொள்ளப் போகிறேன் என்று கூறினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அனிகா, விசித்திரமான விஷயம் என்னவென்றால், அந்த சோகமான நிலைமை உண்மையில் எனக்கு ஏற்பட்டது. இப்படி சொல்லி எனக்கு ஒரு மெயில் வந்தது. அது மிகவும் பயமாக இருந்தது. ஆனால், அதை பற்றி விட்டுடுங்கள் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: