பெண்களுக்கு அவரவர் ராசிப்படி இந்த விசயத்தில‌ பலவீனம் இருக்கும்! பலவீனம் என்ன தெரியுமா!

0
2075

பல நூற்றாண்டுகளாக பெண்கள் அடிமைப்பட்டு கிடந்த காலங்கள் மாறி இப்போதுதான் அவர்களுக்கான உரிமைகளை அவர்கள் பெற தொடங்கியுள்ளனர். ஆனால் இன்றும் பல நாடுகளில் குறிப்பாக இந்தியாவின் பல பகுதிகளில் பெண் சுதந்திரம் என்பது எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. பெண்களை அடிமைப்படுத்தி வைக்க நம் முன்னோர்கள் கூறிய முட்டாள்தனமான காரணம் அவர்கள் பலவீனமானவர்கள் என்பதுதான்.

பெண்கள் பலவீனமானவர்கள் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதை நாம் நன்கு அறிவோம், உடல் வலிமை மட்டுமே ஒருவரை பலசாலியாக மாற்றிவிடாது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே பெண்கள் மனவலிமையில் சிறந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். இந்த வித்தியாசங்கள் அவர்களின் பிறந்த ராசிகளால் கூட இருக்கலாம். இந்த பதிவில் மனவலிமையில் சிறந்த பெண்களின் தரவரிசையை அவர்களின் ராசி அடிப்படையில் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசி பெண்கள் மிகவும் மென்மையானவராகவும், நட்போடு பழக கூடியவராகவும் இருப்பார்கள், ஆனால் அவர்களின் நற்பண்புகள்தான் மற்றவர்களால் பலவீனமாக பார்க்கப்படும். இயற்கையாகவே இவர்கள் கொஞ்சம் சோம்பேறிகள் மேலும் இவர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் அது ஒருபோதும் வெற்றிகரமாக முடியாது. இவர்கள் மதிப்பு மிக்கவர்கள், வேடிக்கையானவர்கள் ஆனால் வேலை என்று வரும்போது அதிகம் பயப்பட கூடியவர்கள், சூழிநிலைகளை சமாளிப்பதில் இவர்களுக்கு அதிக சிக்கல்கள் இருக்கும். என்ன செய்ய வேண்டும் என்பதில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

தனுசு
விடாமுயற்சிக்கு உதாரணமாக இருப்பவர்கள் நீங்கள், நினைத்த வேலையை முடிக்கும் வரை நீங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டீர்கள். ஒரு விஷயத்துடன் முழுமையாக ஒன்றிணைக்கப்படுவது உங்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும், உங்களின் பொறுமையின்மைதான் உங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கும். உங்களுக்கு எது பொருத்தமாக இருக்கும் என்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தில் இருந்து எப்போது உங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு நன்கு தெரியும். உங்களுக்கான சரியான பாதையை அமைத்து கொண்டு அதில் பயணியுங்கள், நீங்கள் எதிர்பார்க்காத வெற்றி உங்களை வந்தடையும்.

மீனம்
மிகவும் இரக்க குணம் வாய்ந்தவர்கள் நீங்கள் ஆனால் அதிகம் பயப்படக் கூடியவர்களும் நீங்கள்தான். உங்களின் இலக்கை அடைய உங்களுக்கான சரியான முடிவும், உந்துதலும், கவனமும் வேண்டும். அதிகம் கனவு காண்பதை நிறுத்துங்கள் ஏனெனில் அது உங்களின் இலக்கிலிருந்து திசைதிருப்பும். நீங்கள் விரும்புவதை அடைய அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள். பிடித்தவர்கள் மீது அதிக அக்கறை செலுத்தவுது உங்களின் சிறந்த பண்பாகும், அதுவே நீங்கள் விரும்பியதை உங்களுக்கு பெற்றுத்தரும்.

மேஷம்
நீங்கள் எதிர்பார்ப்பதை உங்களால் அடைய முடியும் ஆனால் உங்கள் எண்ணங்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் அதுதான் உங்கள் பிரச்சினை. நீங்கள் மிகவும் தைரியசாலி உங்களின் மதிப்பு உங்களுக்கு நன்றாகவே தெரியும் ஆனால் உங்கள் இலட்சியத்தை அடையும் முன் அதிலிருந்து விலகினால் அதனால் உங்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படும். ஒருபோதும் தயங்கி நிற்காதீர்கள் நீங்கள் அடைய வேண்டிய உயரம் நிறைய இருக்கிறது.

துலாம்
இவர்களை தீர்மானிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று, ஏனெனில் இவர்கள் முடிவெடுப்பதில் பெரும்பாலும் நிறைய தவறுகளை செய்வார்கள். நீங்கள் மிகவும் உறுதியும், தைரியமும் மிக்கவர்கள் ஆனால் உங்களுக்கு சிறந்தது எது என்று முடிவெடுக்க பெரும்பாலும் அடுத்தவரின் உதவியை நாடுவீர்கள். நீங்கள் அதிகம் கனவு காண்பீர்கள், நினைத்ததை அடைய கடுமையாக முயற்சி செய்யவும் கூடியவர்கள் ஆனால் மற்றவர்களின் துணை எப்பொழுதும் உங்களுக்கு தேவைப்படும் ஒன்றாக இருக்கும். இதனாலேயே உங்களால் எப்பொழுதும் தாலமி பொறுப்பிற்கு வர இயலாது.

கன்னி
உங்களின் சிறந்த குணங்களில் ஒன்று உங்களின் பொறுமை, ஆனால் நீங்கள் எந்த வேலையையும் திட்டமிட்டு செய்யமாட்டிர்கள், அதுவே உங்களின் முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக இருக்கும். நீங்கள் வேலை செய்யும் உரை கடுமையாவும், கட்டுப்பாடுகளுடனும் இருக்கும் இதனால் பல சமயங்களில் நீங்கள் மற்றவர்களால் வெறுக்கப்படலாம். சிறிய தவறுகளுக்கு கூட அதிக கோபப்படுவதால் உங்களின் மனஅழுத்தம் எப்பொழுதும் அதிகமாக இருக்கும். உங்கள் மீது முதலில் நீங்கள் அதிக நம்பிக்கை வைக்க வேண்டும்.

கடகம்
மற்றவர்களை காட்டிலும் உங்களை நீங்கள் அதிகம் ஊக்குவித்து கொள்ள வேண்டும் ஏனெனில் நீங்கள் நினைத்ததை அடையும் அனைத்து நற்பண்புகளும் உங்களிடம் உள்ளது. உங்களின் எதார்த்த குணம், பொறுமையுடன் உங்களின் விடாமுயற்சியும் உங்களின் அடையாளமாக இருக்கும். மற்றவர்களிடம் உதவி கேட்க ஒருபோதும் தயங்காதீர்கள், தான் நினைப்பதுதான் சரி என்னும் எண்ணத்தை மாற்றிக்கொண்டால் நீங்கள் பெரிய உயரத்தை அடையலாம்.

கும்பம்
மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள் நீங்கள், மற்றவர்களின் உதவி தனக்கு தேவையில்லை, தன்னால் தனியாகவே எதையும் சாதிக்க முடியும் என்னும் எண்ணம் கொண்டவர்கள் நீங்கள். உங்களின் தடைகளை எதிர்த்து போராடி முன்னேறுங்கள், ஆனால் மற்றவர்களின் கருத்துக்கும் கொஞ்சம் மதிப்பளிக்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அனைத்து நேரத்திலும் நீங்கள் கூறுவது சரியாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

சிம்மம்
மற்றவர்கள் பார்வையில் நீங்கள் எப்பொழுதும் சோம்பேறிகளாகவே தெரிவீர்கள், ஆனால் உறுதியான பெண்களில் நீங்கள் மிகவும் முக்கியமானவர்கள். நீங்கள் நினைத்ததை அடையும் அனைத்து ஆற்றல்களும் உங்களுக்கு இருக்கிறது இருந்தாலும் மற்றவர்களை நம்புவதற்கு கொஞ்சம் கற்றுக்கொள்ளுங்கள். உஙக்ளின் கருத்துக்களுடன் அனைவரும் ஒத்துப்போக வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

விருச்சிகம்
உங்கள் இலட்சியம் மீதான உங்களின் உறுதிதான் உங்கள் வெற்றிக்கான முக்கிய காரணமாக இருக்கும்,உங்களின் தன்னம்பிக்கையும், வேலையில் கடைபிடிக்கும் நன்னெறியும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். உங்களுக்கு பிடிக்காதவர்களுடன் வேலை செய்யும்போது உங்களின் பொறுமை உங்களுக்கு கைகொடுக்கும். எப்பொழுதும் சிறிது பாதுகாப்பு உணர்வுடன் இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

ரிஷபம்
நினைத்ததை அடையும் அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறது, மற்ற அனைத்து ராசியினரை காட்டிலும் நீங்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருப்பீர்கள். மற்றவர்கள் வாழ்க்கையை பார்க்கும் கண்ணோட்டமும், நீங்கள் வாழ்க்கையை பார்க்கும் கண்ணோட்டமும் எப்பொழுதும் வித்தியாசமாய் இருக்கும். மற்றவர்களுடன் ஒப்பிடும் போது நீங்கள் கனவு காண்பதை அடையும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

மகரம்
தன்னம்பிக்கை மற்றும் மனவலிமையை பொறுத்தவரை மகர ராசி பெண்கள்தான் சிறந்தவர்கள் என்று கூறலாம். இவர்கள் நினைத்தது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் சரி அதனை அடையாமல் இவர்கள் விடமாட்டார்கள். வேலை மீது நீங்கள் காட்டும் பற்று உங்களை சிறந்த தலைவராக மாற்றும், அதேசமயம் பிரச்சினைகளை நீங்கள் கையாளும் விதம் உங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். எனவே ஒருபோதும் உங்கள் மீது நீங்கள் சந்தேகம் கொள்ளாதீர்கள், உங்களுக்கான வெற்றிபடிக்கட்டுகள் உங்களுக்காக காத்து கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒருத்தர முழுசா நம்பறதுக்கு முன்னாடி அவர்கிட்ட இந்த அறிகுறி இருக்கான்னு மொதல்ல பாருங்க!
Next articleமார்ச் மாசம் பொறந்தவங்க எப்பவுமே கொஞ்சம் ஸ்பெஷல்தான் ஏன் தெரியுமா!