அதிகமாக தலைமுடி உதிர்ந்தால் இதில் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து குழைத்து தலையில் தேய்த்து குளியுங்கள் !

0

அதிகமாக தலைமுடி உதிர்ந்தால் இதில் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து குழைத்து தலையில் தேய்த்து குளியுங்கள் !

அறிகுறிகள்: தலைமுடி உதிர்தல். தேவையானவை: சீதாப் பழ விதை.
எலுமிச்சை பழச்சாறு. கடலை மாவு

செய்முறை:
சீத்தாப் பழ விதையை நன்றாக இடித்து பொடி செய்து அந்த பொடியுடன் கடலை மாவை கலந்துக் கொள்ளவேண்டும். இதில் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து குழைத்து தலையில் தேய்த்து நன்றாக ஊறிய பின்பு குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது முற்றிலுமாக குறையும்.

அறிகுறிகள்: தலைமுடி உதிர்தல். தேவையானவை: சீதாப்பழ விதை,
கடலை மாவு, எலுமிச்சை பழச்சாறு.

செய்முறை:
சீத்தாப் பழ விதையை இடித்து பொடி செய்து அந்த பொடியுடன் கடலை மாவை கலந்துக் கொள்ளவேண்டும். இதில் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து குழைத்து தலையில் தேய்த்து நன்றாக ஊறிய பின்பு குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

தலைமுடி உதிர்தல் என்பது ஊட்டச்சத்துக் குறைபாடு, மன அழுத்தம், தைராய்டு, குழந்தைப் பிறந்த பிறகு, தவறான கெமிக்கல் பயன்பாடு, ஹார்மோன் மாற்றம் என பல காரணங்களால் அதிகரிக்கிறது.

வாழ்க்கை பரபரப்பாக மாறிவிட்டது. ஆற அமர உக்கார்ந்து ரசித்து ருசித்துச் சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. அதிகாலை எழுந்து காலார அரைமணி நேரம் நடக்கக்கூட வாய்ப்பில்லாமல் எல்லோரும் பரிதவித்துக் கொண்டிருக்கிறோம்.

குறிப்பாக பெண்கள் தலைமுடி உலர்வதற்கு நேரமாகும் என்று கருதி வாரத்துக்கு ஒருமுறையோ இருமுறையோதான் தலைக்குக் குளிக்கிறார்கள். உடலை, தலைமுடியைப் பராமரிக்கக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். இத்தகைய வாழ்க்கைச் சூழல் பலரை மன அழுத்தத்தில் தள்ளுகிறது. மனஅழுத்தம் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைகிறது. குறிப்பாகப் பொடுகுத் தொல்லை, தலைமுடி உதிர்தல், முடி கொட்டுதல் போன்ற பிரச்னைகள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டன.

தலைமுடி உதிர்தல் என்பது ஊட்டச்சத்துக் குறைபாடு, மனஅழுத்தம், தைராய்டு, குழந்தைப் பிறந்த பிறகு, தவறான கெமிக்கல் பயன்பாடு, ஹார்மோன் மாற்றம் என பல காரணங்களால் அதிகரிக்கிறது. மேலே குறிப்பிட்ட பிரச்னைகளை சரிசெய்ய இந்தக் குறிப்புகளை பின்பற்றுங்கள். தலைமுடி உதிர்தல் என்பது ஊட்டச்சத்துக் குறைபாடு, மனஅழுத்தம், தைராய்டு, குழந்தைப் பிறந்த பிறகு, தவறான கெமிக்கல் பயன்பாடு, ஹார்மோன் மாற்றம் என பல காரணங்களால் அதிகரிக்கிறது.

தலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. முடி வளர்ச்சிக் குறைபாடுகளுக்குச் சரியான உணவுப்பழக்கம் இல்லாதது ஒரு முக்கியக் காரணம். நாம் உண்ணும் உணவில் இரும்பு, புரதம், துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், நாம் இத்தகைய சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்கிறோமா என்பது சந்தேகமே.

முட்டை மாஸ்க் : முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாகப் பிரித்து அதோடு தேன் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை தலைமுடி வேர்களில் படும்படி தேய்த்து 20 நிமிடங்கள் காயவிட்டுப் பின் அலசுங்கள். முட்டை மாஸ்க் : முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாகப் பிரித்து அதோடு தேன் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை தலைமுடி வேர்களில் படும்படி தேய்த்து 20 நிமிடங்கள் காயவிட்டுப் பின் அலசுங்கள்.

நாம் சாப்பிடும் உணவுகளில் போதிய புரதச் சத்து இல்லாததால் முடி வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. கர்ப்ப காலத்திலும் குழந்தைப்பேற்றுக்குப் பிறகும் பெண்களில் பலருக்கு முடி உதிர்வது என்பது இயல்பான ஒன்றாகும். இந்த முடி பிரச்னை ஹார்மோன் மாற்றங்களால் நிகழக்கூடியது. இது சிறிது காலத்துக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும்.

தேங்காய் பால் : தேங்காயை துருவி அதை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் அதன் வெப்பம் குறைந்ததும் மிளகை உடைத்தும், வெந்தையப் பொடியையும் சேர்த்துக் கலக்கி தலையின் வேர்களில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும்.

இன்றைய பெண்களில் பலர் நீளமாக முடி வளர்க்க விரும்புவதில்லை. அப்படியே வளர்த்தாலும் ஹேர் கலரிங், `ஸ்ட்ரெய்ட்டனிங்’ செய்கிறார்கள். சிலர் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். இதனாலும் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு முடி உதிரக்கூடும். புகைப்பிடித்தலும்கூட முடி உதிர, முடி வளர்ச்சி பாதிக்கப்பட ஒரு காரணம். ஆண்களில் பலருக்கு வழுக்கை (alopecia) ஏற்பட இந்தப் புகைப்பழக்கம் ஒரு காரணமாக இருக்கிறது. பரம்பரை காரணமாகவும் வழுக்கை ஏற்படலாம்.

பூஞ்சைத் தொற்று (Fungal infection), வட்ட வடிவில் ஏற்படும் புழுவெட்டு (Ring infection) போன்றவை சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடும். இவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமானால், பாய், தலையணை, சீப்பு, டவல்போன்றவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். பூஞ்சைத் தொற்று, புழுவெட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை பயன்படுத்தினால் நம்மையும் அது பாதிக்கலாம்.

பீட்ரூட் சாறு : 7-8 பீட்ரூட் இலைகளோடு மருதாணி இலைகளையும் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். அந்த பேஸ்டை தலையில் தேய்த்து 15 – 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசுங்கள்.

வாகனங்களின் புகையால் காற்று மாசுபட்டு முடி கொட்டக்கூடும். முதலில் தலையில் பொடுகு ஏற்பட்டு அதன்பிறகு முடி கொட்டத் தொடங்கும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்குத் தலையில் பொடுகு வர வாய்ப்பு உள்ளது. சூரியஒளியில் அதிக நேரம் நிற்பதால் அல்ட்ரா வயலட் கதிர்கள் தலையை நேரடியாகப் பாதிப்பதால் தலைமுடி உடைந்து முடி கொட்டத் தொடங்கும்.

வாரம் ஒருமுறையோ 10 நாள்களுக்கு ஒருமுறையோ ஹெல்மெட்டை சூரியஒளி படும்படி வைத்துப் பயன்படுத்தினால் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கலாம். அதேபோல் ஹெல்மெட்டை அவ்வப்போது சுத்தப்படுத்தி பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கமுடியும்.

குளிக்கும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமிருந்தாலும் முடி கொட்ட வாய்ப்புள்ளது. மழைநீரில் தாதுக்கள் அதிகம் இருக்காது என்பதால் மழைக்காலத்தில் நீரைச் சேகரித்துக் குளிக்கப் பயன்படுத்தலாம். உப்புத்தன்மை குறைவாக உள்ள நிலத்தடி நீரையும் பயன்படுத்தலாம். சூடான நீரை தலையில் ஊற்றினால் ஸ்கால்ப் (Scalp) பாதித்து முடி கொத்துக் கொத்தாக விழ வாய்ப்பு உள்ளது. எனவே வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதே நல்லது.

தலைமுடியைப் பராமரிக்க

உணவுப் பழக்கவழக்கங்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். உணவில் அதிகம் புரதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள், சோயா, தேங்காய்ப்பால், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பப்பாளி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது.

அதேபோல் பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இரவில் இரண்டு பேரீச்சம்பழம், 10 உலர்ந்த திராட்சையை நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன்மூலம் போதிய இரும்புச்சத்து கிடைக்கும். அத்திப்பழம், பீட்ரூட், மாதுளை, சப்போட்டா போன்ற பழங்களிலும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. எள் மிட்டாய், எள்ளுருண்டை சாப்பிடுவதன்மூலமும் போதிய இரும்புச் சத்து கிடைக்கும்.

தலைமுடி உதிர்வதற்கான அடிப்படைக் காரணமாக மண்டையின் மீதுள்ள உறைப்பை களில் ஹார்மோன் சுரப்பு நின்று போவதையே முதல் காரணமாகக் கூறினாலும், பல துணைக் காரணங்களும் உள்ளன.அவைகளில் முக்கிய மானவை :

புரதச்சத்துப் பற்றாக்குறை :

தலைமுடி வளரவும், பாதுகாக்கப்படவும், புரதம் மண்டைப் பகுதியில் சேகரித்து வைக்கப் படுகிறது. புரதம் உயிர் வளர்க்கும் சத்துக்களில் தலையாயது. அது பற்றாக்குறை ஆகும் போது தலைமுடிக் கொத்தின் அமைப்பு சிதறுகிறது. சில சமயங்களில் அதன் நிறமும் மாறும். முடிகளின் வேர்களில் வலிமை போய் விடுவதால் அவை முழுமையாக அறுந்துபோகும். முடி நீளத்தில் பாதி தொங்கி, மீதி நிற்பதும் ஏற்படும்.

இரும்புச்சத்துப் பற்றாக்குறை :

பொதுவாக இரும்புச்சத்துக் குறைபாடு ரத்தச்சோகை (anaemia)யை ஏற்படுத்தும். முடி கொட்டுவதற்கு ரத்தச்சோகை காரணமாக அமைந்தாலும், ரத்தச் சோகையே இல்லாத சிறு அளவில் இரும்புச் சத்துப் பற்றாக்குறை இருப்பி னும் கூட முடி உதிரும் வாய்ப்பு உண்டு.

துத்தநாகப் பற்றாக்குறை :

உடல் வளர்ச்சி மற்றும் நலத்திற்கு துத்த நாகம் மிகவும் அவசியப்படுகிறது. இந்தச் சத்து பல உணவுப் பொருள்களிலே இருந்தும்கூட அது ரத்தத்தில் உட்கிரகிக்கப்பட முடியாத சூழல் ஏற்படுவது உண்டு. எரிதெமா (Erithema) முதலிய சில நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு துத்தநாகத்தால் உடலில் ஏற்படும் திறன் குறையும். அப்போது முடி கொட்டத் தொடங்கும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலை மறை காய் மறையாக தெரியும் படியான கவர்ச்சி உடையில் கலக்கிய பிரியங்கா சோப்ரா !
Next articleநீர்க்கடுப்பு மற்றும் நீர் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த இவற்றை கஷாயம் செய்து காலையும் மாலையும் குடித்துவரவும் !