அடிபட்ட இடத்தில் வீக்கம் மற்றும் இரத்தக்கட்டு குறைய இவற்றை சேர்த்து பற்று போட்டு வந்தால் குணம் கிடைக்கும் !

0

அறிகுறிகள்: இரத்தக்கட்டு.

தேவையானவை: எலுமிச்சை பழச்சாறு, கரியபவளம்.

செய்முறை: எலுமிச்சை பழச்சாறு எடுத்து அதனுடன் கரியபவளம் கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து தாங்கும் அளவு சூட்டுடன் பற்று போட்டு வந்தால் இரத்தக்கட்டு நீங்கும்.

அறிகுறிகள்: வீக்கம், இரத்தக் கட்டு.

தேவையானவை: கரியபவளம், காசுக்கட்டி, மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், நெல்.

செய்முறை: சம அளவு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், கரியபவளம், நெல், காசுக்கட்டி போன்றவற்றை எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து பிறகு பாத்திரத்தில் போட்டு நெருப்பின் மேல் வைத்து நன்றாக  கொதிக்க வைத்து பிறகு அதை எடுத்து தொடர்ந்து பற்று போட்டு வந்தால் வீக்கம் மற்றும் இரத்தக்கட்டு குறையும்.

அறிகுறிகள்: இரத்தக்கட்டு.

தேவையானவை: வெங்காயச்சாறு,பனங்கற்கண்டு,சோற்றுக் கற்றாழை,சிற்றாமணக்கு எண்ணெய்.

செய்முறை:அரை கிலோ சோற்றுக் கற்றாழையின் மடலை 10 முறை அலசி எடுத்து கொள்ள வேண்டும், சிற்றாமணக்கு எண்ணெய் ஒரு கிலோ, இரண்டையும் சேர்த்து பதமாகக் காய்ச்சி எடுத்து, அத்துடன் வெள்ளை வெங்காயச் சாறு 100 கிராம் பனங்கற்கண்டு 1/2 கிலோ இடித்துப் போட்டு நன்றாகப் பிசைந்து குழம்பாக்கி, சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து மீண்டும் இலேசான சூடு ஏற்றி கிளறிக் கொண்டே வந்தால் பாகு பதம் வந்தவுடன் இறக்கி வைக்கவும். பெரியவர்களுக்கு 10 கிராம் அளவிலும், 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்கு 5 கிராம் அளவிலும் இரண்டு வேளை கொடுத்து வந்தால் அடிபட்ட இடத்தில் இரத்தக்கட்டு குறையும்.

அறிகுறிகள்:இரத்தக்கட்டு,வீக்கம்.

தேவையானவை:சுண்ணாம்பு,பனை வெல்லம்.

செய்முறை:பனை வெல்லம், சுண்ணாம்பு ஆகியவற்றை எடுத்து நன்கு பொடி செய்து. துணியை சுட்டு கரியாக்கிக் கொள்ளவும். இந்த மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு கலந்து வீக்கம், இரத்தக்கட்டு மேல் தடவிப் பற்று போட்டு வர இரத்தக்கட்டு குறையும்.

அறிகுறிகள்:உடலில் அடிபட்டு இரத்தம் கட்டுதல்.

தேவையானவை:உப்பு,புளி.

செய்முறை:புளியை சிறிது அளவு எடுத்து அதே அளவிற்கு உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து சுண்டக்குழம்பு போல கரைத்து வடிகட்டி கொதிக்க வைத்து மிதமான சூட்டுடன் இரத்த கட்டு மேல் கனமாகப் பற்றுப் போட்டு வந்தால் இரத்த கட்டு குறையும்.

அறிகுறிகள் :இரத்தக்கட்டு.

தேவையானவை :செம்மண்,முட்டை,படிகாரம்.

செய்முறை :படிகாரம் தேவையான அளவு எடுத்து அதே அளவுக்கு செம்மண் சேர்த்து அதில் முட்டையின் வெள்ளைக் கருவை விட்டு நன்றாக அரைத்துப் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு குறையும்.

அறிகுறிகள் :இரத்தக்கட்டு.

தேவையானவை:உப்பு,மஞ்சள்,புளி.

செய்முறை :புளி, உப்பு, மஞ்சள் மூன்றையும் நன்றாக அரைத்து கொதிக்க வைத்து இளஞ்சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள இடத்தில் தினமும் பற்று போட்டு வந்தால் இரத்தக்கட்டு குறையும்.

அறிகுறிகள் :இரத்தக் கட்டு.

தேவையானவை:கற்றாழை,எலுமிச்சைப் பழச்சாறு.

செய்முறை :எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் கற்றாழை இரண்டையும் இரும்பு சட்டியில் போட்டு நன்றாக காய்ச்சி மிதமான சூட்டில் இரத்தக்கட்டு உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால் இரத்தக்கட்டு குறையும்.

அறிகுறிகள் :இரத்தம் உறைதல்.

தேவையானவை:பனை வெல்லம்,சுண்ணாம்பு.

செய்முறை : சுண்ணாம்பு, பனைவெல்லம் ஆகியவற்றை நன்றாக அரைத்து இரத்தக்கட்டு உள்ள இடத்தில் தினந்தோறும் தடவி வந்தால் இரத்தக்கட்டு குறையும்.

அறிகுறிகள் :இர‌த்த‌க் க‌ட்டு.

தேவையானவை :நெல்,ம‌ஞ்ச‌ள்.

செய்முறை : ம‌ஞ்ச‌ள்,க‌ஸ்தூரி ம‌ஞ்ச‌ள், நெல், ஆகியவற்றை ச‌ம‌ அள‌வு எடுத்து,த‌ண்ணீர் விட்டு‌ அரைத்து ந‌ன்றாக‌க் கொதிக்க‌ வைத்து மிதமான சூட்டில் ப‌ற்றுப் போட்டு வந்தால் இரத்தக்கட்டு குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசீரற்ற இரத்த ஒட்டம் உள்ளவர்கள் இரத்த ஓட்டத்தை சீராக்க சில சித்த வைத்திய முறைகள் !
Next articleஇரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக கொழுப்பு என்பவற்றை குணமாக்க சில இயற்கை மருத்துவ குறிப்புக்கள் !