ஆள் செய்யாததை நாள் செய்யும் என்பார்கள். நாம் செய்யக்கூடிய நல்ல காரியங்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் செய்ய ஆரம்பித்தால் அதுவே வெற்றியைத் தேடித்தரும்.
அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.
நல்ல செயல்களை செய்யத் தொடங்கலாம். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது.
வேத ஜோதிடத்தின்படி 12 ராசிகளிலும் அசுவினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனி குணாதிசயங்கள் இருக்கும். சில நட்சத்திரங்களில் நல்ல காரியங்கள் செய்யலாம். சில நட்சத்திரங்கள் நல்ல காரியங்களுக்கு ஏற்றவை அல்ல.
குடும்பத்தில் சந்தோஷத்தைப் பெறப்போகும் அசுவினி நட்சத்திர அன்பர்களே, 2020 இல் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இந்த வருடம் சுபச் செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதைத் தவிர்த்து அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்திற்கு உதவும்.
அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும் போதும் கவனமாக இருப்பது நல்லது.
இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்குப் பிறகு கடினமான காரியம் கூட கைகூடும்.
மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும்.
பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் நிதானமாகப் பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப் போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும்.
நிதானமாகப் பேசி மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வது காரிய வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி இந்த வருடம் அமையும். திட்டமிட்டபடி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும்.
மனதில் உற்சாகம் பிறக்கும். அரசியல் துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகப்பெருமானை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்
ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
அதிர்ஷ்ட மாதங்கள்
சித்திரை, ஆவணி, மார்கழி