அக்டோபர் 26 வரை புதனின் தாக்கம் இருக்கும் ராசிக்காரர்கள் யார்?
புதன் அக்டோபர் 02 ஆம் தேதி கன்னி ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார்.
புதன் தனது சொந்த ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
இப்போது கன்னி ராசியில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்ததால், எந்த ராசிக்காரர்கள் அதிக கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சற்று சோர்வாக உணர வாய்ப்புள்ளது. இக்காலத்தில் சிலருக்கு நிதி பிரச்சனைகளும் வரலாம்.
துலாம்
உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்பவர்கள் பரிவர்த்தனைகளை செய்யும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் அந்த பயணத்தால் நிறைய பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். ஆகவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சவால்கள் எதிர்கொள்ளும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்திலும் சற்று கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக போதுமான ஓய்வை உடலுக்கு வழங்க வேண்டும்.
புதனால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்கும் பரிகாரங்கள்
4 முக ருத்ராட்சம் அணிவதால் புதனால் சந்திக்கும் பிரச்சனைகள் குறைந்து, அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
மரகத ரத்தினம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தொழிலில் வெற்றி பெற பணியிடத்தில் புத்த யந்திரத்தை வைக்கவும் .
புதன்கிழமைகளில் ஏழை மாணவர்களுக்கு கல்விப் பொருட்களை தானம் செய்யுங்கள்.
பசுவிற்கு சாப்பிட புல் கொடுக்கவும்.
விநாயகரை வழிபடவும்.
கையில் எப்போதும் ஒரு பச்சை நிற துணி/கைக்குட்டையை வைத்துக் கொள்ளுங்கள்.