அக்டோபர் 23 முதல் ஜனவரி 17 வரை 87 நாட்கள் யோகம் பெறும் ராசிகள் யார் யார்?
கும்பத்திற்குச் சென்று திரும்பிய சனி பகவான், மகரத்தில் வக்ரகதி பெயர்ச்சியிலேயே சஞ்சரித்து வருகிறார்.
இவர் அக்டோபர் 23ம் தேதி வரை வக்ர நிலையில் இருந்து, பின்னர் சாதாரண நிலையான, நேர்கதியில் பயணிக்க உள்ளார்.
அக்டோபர் 23 முதல் ஜனவரி 17 வரை 87 நாட்கள் மகரத்தில் இருக்கும் சனி பகவான் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலனை அள்ளித்தர உள்ளார்.
எந்தெந்த ராசியினர் நற்பலன்களைப் பெற உள்ளனர் என்பதைப் பார்ப்போம்.
அடுத்த 87 நாட்களில் காத்திருக்கும் மாற்றம்! வக்ர நிவர்த்தி அடையும் சனி கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள் யார் யார்? | Sani Peyarchi2023
மேஷ ராசி
சனி பகவான், மேஷ ராசிக்கு 10ம் வீட்டில் அமர்ந்திருப்பார். தொழில் காரகன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் முன்னேற்றத்தை அடைவார்கள். உங்களின் கடின உழைப்புக்கு சரியான பலன்கள் கிடைக்கும்.
பண ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில், வணிகர்கள் இந்த காலகட்டத்தில் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும்.
அதே சமயம் அதற்கான அற்புத லாபமும், வெற்றியும் கிடைக்கும்.
கடக ராசி
கடக ராசிக்கு 7ம் வீட்டில் சனி பகவானின் சஞ்சாரம் நிகழும். இதனால் உங்களின் பிரச்னையும், குடும்பத்தின் பிரச்னைகளும் தீரும். தாம்பத்தியத்தில் பிரச்னைகள் இருந்திருந்தால் அவை விலகி மகிழ்ச்சி கிடைக்கும்.
தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்திலும் சாதகமான மாற்றங்கள் காணப்படும். உங்கள் பணியிடத்தில் பதவி உயர்வு பெறும் விருப்பம் நிறைவேறும்.
குடும்ப வாழ்க்கையில் இந்த காலகட்டத்தில் பெரியவர்களின் ஆதரவைப் பெறலாம்.
துலாம் ராசி
துலா ராசிக்கு 4ம் வீட்டில் சனி பகவானின் சஞ்சாரம் நிகழும். இந்த காலகட்டத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பல்வேறு வழிகளில் வாய்ப்புகள் கிடைக்கும்.
உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த நிதிப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். சிலர் கடந்த காலத்தில் செய்த முதலீடுகளால் ஆதாயம் பெறவும் வாய்ப்புள்ளது. சனி அமைப்பால் மனக் கவலைகளில் இருந்தும் விடுதலை பெறலாம்.
இந்த நேரத்தில் வீட்டில் எந்த சுப காரியமும் சிறப்பாக முடியும். ஆரோக்கியத்திலும் நல்ல மாற்றங்களைக் காணலாம்.