அக்டோபர் மாத ராசி பலன்கள்! எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள்!

0

அக்டோபர் மாத ராசி பலன்கள்! எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள்!

அக்டோபர் மாதத்தில் ரிஷப ராசியில் உள்ள செவ்வாய் மிதுன ராசிக்கு செல்கிறார்.

சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். ஜென்ம ராகு, ஏழாம் வீட்டில் கேது உள்ளது. சூரியன் பாதி நாட்கள் கன்னி ராசியிலும் பின்னர் துலாம் ராசியிலும் பயணம் செய்வார்.

சூரியன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்கள் இந்த மாதம் இடப்பெயர்ச்சி அடைகின்றன.

அந்தவகையில் இந்த மாதம் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

மேஷம்
ராசிநாதன் செவ்வாய் 15 நாட்களுக்கு இரண்டாம் வீட்டிலும் பிற்பகுதியில் செவ்வாய் 3வது வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவது சிறப்பு. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். வேலைக்காக வெளிநாடு செல்ல யோகம் வரும்.பயணங்களால் நன்மை உண்டாகும். நல்ல பலன்கள் கிடைக்கும் மாதமாக இருக்கும்.

ரிஷபம்
ராசிநாதன் நீசபங்கம் அடைந்திருப்பது சிறப்பில்லை. புதிய முயற்சிகளுக்கு தடைகள் உண்டாகும். பிற்பகுதியில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால் வெற்றிகளும் யோகங்களும் தேடி வரும்.

பெண்களால் நன்மை உண்டாகும். சிறப்பான வெற்றிகள் கிடைக்கும். திருமணத்திற்கு வரன் பார்க்கலாம். வருமானம் அதிகரிக்கும். சுப செலவுகளும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் வீடு வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மிதுனம்
அஷ்டமத்து சனியில் பிடியில் உள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் முயற்சிகளு வெற்றி கிடைக்கும். ராசி நாதன் புதன் உச்ச நிலையில் பயணம் செய்கிறார். நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மாற்றங்களும் முன்னேற்றங்களும் உண்டாகும். வேலையில் இருந்த மன அழுத்தம் நீங்கும். புதிய வேலைகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறக்கும். வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை நீங்கும்.

கடகம்
குரு பகவான் பார்வையால் அக்டோபர் மாதத்தில் நிறைய அற்புதங்கள் நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மூன்றாம் வீட்டில் மூன்று கிரகங்கள் கூடியுள்ளன.

மாத பிற்பகுதியில் சூரியன் நான்காம் வீட்டில் நீச்ச நிலையை அடைந்தாலும் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகம் பெறுவது சிறப்பான அமைப்பு. வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். பொருளாதார வளம் நிறைந்த மாதம். புதிய முயற்சிகள் பலிக்கும். புது உற்சாகத்துடன் இந்த மாதத்தில் செயல்படுவீர்கள்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு ராசி நாதன் சூரியன் குருவின் பார்வையில் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருப்பது சிறப்பு. தன வருமானம் அதிகரிக்கும்.

மாத பிற்பகுதியில் ராசி நாதன் சூரியன் நீச்ச நிலையை அடைந்தாலும் நீச்ச பங்க ராஜயோகம் பெறுவது சிறப்பு. கடன் தொல்லைகள் இந்த மாதத்துடன் முடிவுக்கு வரப்போகிறது. பங்குச்சந்தை முதலீடுகளில் திடீர் லாபம் கிடைக்கும். உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

வண்டி வாகன யோகம் கை கூடி வருகிறது. வெளிநாடு யோகமும் கை கூடி வரப்போகிறது. நல்ல வேலையும் விசாவும் கிடைக்கும்.

கன்னி
அக்டோபர் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கக் கூடிய அற்புதமான மாதம். நினைத்தது நிறைவேறும் காரணம் உங்கள் ராசிநாதன் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்.

உங்கள் ராசியையும் ராத நாதனையும் குரு பகவான் பார்வையிடுகிறார். நினைத்தது நடக்கும் புதிய முயற்சிகள் கை கூடி வரும். கடந்த கால பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.

உயரதிகாரிகளால் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடன் வாங்கிக்கொண்டு பணத்தை ஏமாற்றியவர்கள் உங்களுக்கு பணத்தை திருப்பி தருவார்கள். தலைமைப் பொறுப்பு தேடி வரும். திடீர் ஜாக்பாட் அடித்தாலும் ஆச்சரியமில்லை.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே..உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பகுதியில் நீச்ச பங்க நிலையில் 12ஆம் வீட்டில் மறைந்திருக்கிறார். முயற்சிகளுக்கு சின்னச் சின்ன தடைகள் ஏற்படும்.

மாத பிற்பகுதியில் சுக்கிரன் உங்கள் ராசிக்கு வந்து ஆட்சி பெற்று அமரப்போகிறார். வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகிறது. மாத பிற்பகலில் சாதனைகள் புரியப்போகிறீர்கள். புதிய திட்டங்கள் போட்டு அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள்.

திருமணம் சுப காரியம் கை கூடி வரப்போகிறது. வீடு வாகன சேர்க்கை உண்டாகும். சகோதர சகோதரிகளால் சந்தோஷம் உண்டாகும். வேலை விசயமாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். புதிய திருப்பங்கள் ஏற்படப்போகிறது.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு விடிவு காலம் வந்து விட்டது. குரு பகவான் பார்வையில் உங்கள் ராசி உள்ளது. ராசிநாதன் செவ்வாய் பகவான் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பது சாதகமான அம்சம்.

வெற்றிகள் தேடி வரப்போகிறது. அதிக உற்சாகமாக வேலையில் செயல்படுவீர்கள். வெளியூர் செல்லும் பயணங்களில் வெற்றி கிடைக்கும்.

உங்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். மன நிம்மதி நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சோதனைகளை சாதனைகளாக மாற்றப்போகிறீர்கள்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். நல்ல வேலை கிடைக்கும். உங்களை விட்டு விலகிச்சென்றவர்கள் தேடி வருவார்கள். மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். வேலையில் இருந்த பளு முடிவுக்கு வரும். பெண்களுக்கு வீட்டிலும் அலுவலகத்திலும் மதிப்பு மரியாதை தேடி வரப்போகிறது.

மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே..ஒருவித சிக்கலில் இருந்த உங்களுக்கு இந்த மாதம் விடிவு காலம் வரப்போகிறது. நல்ல பலன்கள் நடைபெறும் மாதமாக அமைந்துள்ளது. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கப்போகிறது.

வேலையில் இருந்த மன அழுத்தங்கள் நீங்கும். எதையும் தைரியமாக சமாளிக்கும் மன பக்குவம் வந்து விடும். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் அக்டோபர் மாதத்தை கடந்து விடுவீர்கள்.

கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. எதிலும் கவனமும் நிதானமும் தேவை. நல்ல வேலை கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம்.

அது ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். பண விசயத்தில் கவனம் தேவை. பலரும் ஆசையை தூண்டுவார்கள். அதில் இருந்து கவனம் தேவை. பங்குச்சந்தை, கிரிப்டோ கரன்சி போன்றவைகளில் பணத்தை முதலீடு செய்து சிக்கிக்கொள்ள வேண்டாம்.

ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள். அக்டோபர் மாதத்தில் அனுபவங்களை பாடங்களாக கற்றுக்கொள்ளுங்கள்.

மீனம்
மீனம் ராசிக்காரர்களே..உங்கள் ராசி அதிபதி குருபகவான் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். உங்கள் ராசியை உச்சம் பெற்ற புதன் பகவான் பார்வையிடுகிறார். சுக்கிரன், சூரியன் கிரகங்களின் நேரடி பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.

மாத பிற்பகுதியில் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு சூரியனுடம், சுக்கிரனும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். எட்டுக்கு அதிபதி சுக்கிரன் எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். மறைமுக வருமானங்கள் வரும். திடீர் தன வரவு வந்து திக்குமுக்காட வைக்கப்போகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 30 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 30
Next article12 ராசிக்காரர்களும் பணக்காரராக வர வேண்டுமா? ஜோதிடத்தின் படி பணத்தை சேமிப்பதற்கான சரியான வழி!