உங்களுக்கு இந்த 5 அறிகுறி இருந்தா அந்த காதல் கல்யாணத்துல முடியாது! அவை என்னென்ன!

0

காதல் என்ற வார்த்தைய கேட்டாலே மனதுக்குள் ஒரு சந்தோஷம் எப்பொழுதும் ஒட்டிக் கொள்ளும். முன் பின் தெரியாத இரு மனங்களைக் கூட இந்த ஒரு சொல் இணைத்து விடும். அந்த அளவுக்கு காதலின் பலம் ஆளப் பெரியது.

உறவு என்று வந்தாலே அதில் மரியாதை, உணர்வுகள் மற்றும் பிணைப்புகள் இருக்க வேண்டும். ஆனால் இது இருவர் காதலித்தால். ஒருவர் மட்டும் காதலித்தால் என்ன ஆகும்.

ஒருதலைக் காதல்
அந்த உணர்வுகள் எப்படி இருக்கும். உங்கள் உணர்வுகளை நீங்கள் நேசிக்கும் நபர் புரிந்து கொள்ளாத போது எப்படி இருக்கும். கண்டிப்பாக உங்கள் காதல் சிக்கலில் தான் இருக்கும். உங்கள் துணை உங்களை விரும்பவில்லை என்பதை எவ்வாறு அறிந்து கொள்வீர்கள். உங்கள் துணை உங்களுடன் இல்லை என்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

உரையாடலை தொடங்க நேரிடும்
நீங்கள் உங்கள் துணையிடம் பேச நினைத்தாலோ ஏன் மெசேஜ் அல்லது கால் எதாக இருந்தாலும் முதலில் நீங்கள் தான் தொடங்க வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு ஆள் தான் அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டியிருக்கும். எதாவது வெளியே செல்ல வேண்டியிருந்தாலும் சரி, இருவரும் அமர்ந்து பேசுவதாலும் சரி நீங்கள் தான் எந்த ப்ளானும் செய்ய வேண்டியிருக்கும்.

உங்களுடைய துணை எப்பொழுதும் போனை கட்டிக் கொண்டே இருப்பார். நீங்கள் சொல்வதைக் கூட கேட்க அவர் விரும்பமாட்டார். இந்த நிலை உங்கள் உறவு சிக்கலில் இருப்பதை கூறுகிறது. எனவே குழப்பம் ஆகுவதை தவிர்த்து இருவரும் அமர்ந்து பேசி ஒரு முடிவு எடுக்கலாம்.

நண்பர்களுடன் வெளியே செல்லுதல்
உங்கள் மீது அவர்களுக்கு காதல் இல்லாவிட்டால் உங்களை புறக்கணிக்க ஆரம்பித்து விடுவார்கள். உங்களை புறக்கணித்து விட்டு நண்பர்களுடன் வெளியே செல்லுதல், சுற்றுதல் போன்ற செயல்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இதை நீங்கள் சுட்டிக் காட்டினால் கூட அதற்கு வாக்குவாதம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். எனவே இதை நீங்கள் புரிந்து கொண்டு உடனடியாக உறவில் இருந்து வெளிவருவது நல்லது.

தேவையில்லாமல் மன்னிப்பு கேட்பது
எல்லாரிடமும் நல்லது கெட்டது இரண்டுமே இருக்கும். ஆனால் உங்கள் துணை உங்களை காதலிக்கவில்லை என்றால் நீங்கள் செய்த தவறுக்கு குற்றவாளியாக்கி நிற்க வைத்து விடுவார்கள். இதனால் நீங்கள் அடிக்கடி அவரிடம் மன்னிப்பு கேட்க நேரிடும். இப்படி உறவில் நீங்கள் மட்டும் அடிக்கடி மன்னிப்பு கேட்பது தவறு இருப்பதை காட்டுகிறது. இதற்கு காரணம் நீங்கள் செய்யும் செயலுக்கு உங்கள் துணை திருப்தி அடையவில்லை. இதனால் தான் அவர் உங்களை அடிக்கடி விமர்சித்து கொண்டே இருக்கிறார்.

எதிர்கால திட்டம்
உறவு என்று வரும் போது கண்டிப்பாக இருவரும் சேர்ந்து தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் உங்கள் துணை உங்களை விரும்பவில்லை என்றால் எதிர்கால திட்டம் குறித்து உங்களிடம் எதுவுமே கூற மாட்டார்கள். உங்களிடம் முக்கியமான திட்டங்களை பற்றி கூற மறந்து விடுவார்கள்.

கவலைப்பட மாட்டார்கள்
உங்களை நினைத்து கவலைப்பட மாட்டார்கள். கண்டுகொள்ள மாட்டார்கள். உங்களுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பது குறித்து கவலைப்பட மாட்டார்கள். மேலும் அதை செய்யவும் மாட்டார்கள். நிஜமாகவே உங்கள் துணை உங்களை விரும்பினால் அக்கறையுடன் கவனிப்பார்கள், கவலைப்படுவார்கள், தினசரி நீங்கள் செய்வதை ஆர்வமாக பார்ப்பார்கள். இப்படி அவர்கள் இல்லாவிட்டால் அவர்களுக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

காயப்படுத்திக் கொள்ளுதல்
உங்களை ஒருவர் உண்மையில் விரும்பினால் உங்களுடைய சைகைகளும் நடத்தைகளுமே போதும். உங்களைப் பற்றி எளிதில் புரிந்து கொள்வார்கள். அவர் உங்களை விரும்பவில்லை என்று சொல்ல தயக்கம் காட்டினால் நீங்களாவது புரிந்து கொள்ளுங்கள். எனவே அவர்களுடன் இது குறித்து பேசுங்கள். கண்மூடித்தனமாக உறவில் இருக்காதீர்கள். இருவருக்கும் எது நல்லது என்று முடிவு எடுத்து உறவில் இருந்து பிரிந்து செல்லுங்கள். நீங்களே உங்களை காயப்படுத்திக் கொள்ளாதீர்கள். உறவு என்பது இருவரும் சேர்ந்து மனப்பூர்வமாக வாழ்ந்து வருவது. மனங்கள் ஒன்று படாத போது உறவிலிருந்து பிரிவது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇதில் ஒரு அறிகுறி இருந்தாலும் உங்கள் காதலன்/காதலி உங்களுக்கு சிறந்த துணையாக இருப்பார்களாம் தெரியுமா!
Next articleஒரு வாரத்துல நீங்க கலராகணுமா! கொய்யாப்பழ தோலை இப்படி அப்ளை பண்ணுங்க!