பூரான் க.டி.த்து விட்டால் என்ன செய்யலாம்! க.டி.யை தீர்க்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன!

0

பூரான் க.டி.த்து விட்டால் என்ன செய்யலாம்! உடனடியாக‌ க.டி.யை தீர்க்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன!

வி.ஷ ஜந்துக்களில் ஒன்றாகிய சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடைய பூரான் என்று அழைக்கப்படும் – நூறுகால் பூச்சியும் மிகவும் சுறுசுறுப்பான பிராணியாக உள்ளதுடன், எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும் இது பூச்சிகளைத் தின்று வாழுகின்றது. இதில் பல பிரிவுகள் உள்ளதுடன், பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்களினை கொண்டு நீண்டு வளர்ந்திருப்பதுடன், கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலையும் காணப்படும்.

வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் காணப்டுவதனால் பூரான் க.டி.க்.கு.ம்.போது ஒரு வகையான வி.ஷ.ம் வெளிவரும். மேலும், பூரான் கடிக்கும்போது வலியே தெரியாதிருப்பதுடன், இரண்டு நாட்கள் சென்ற பின்னரே வலியினை உணரமுடிவதுடன், உடலில் பல இடங்களில் அதிகளவான தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும்.

பூரான் க.டி.த்.த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடிவதுடன், பூரான் க.டி.த்.த உடலில் வி.ஷ.த்.தி.ன் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். எனNவு, உடலெங்கும் அதிகளவான தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு அதில் சொறிந்தால் புண் ஏற்பட்டால் வி.ஷ.ம் அதிகளவில் பரவியுள்ளது என்பதனை உறுதிசெய்து கொள்ள முடியும்.

பூரான் க.டி தான் என்று உறுதிசெய்த பின்னர்; தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்ககும் போது தடிப்புகள் மறைவதுடன், உள்ளுக்கு பனைவெல்லாம் சாப்பிடுதலும் அவசியம்.

பூரான் கடியை தீர்க்க மருந்து

150 கிராம் குப்பைமேனி இலை மற்றும் 150 கிராம் உப்ப ஆகியனவற்றை நன்கு அரைத்து, அவ்வாறு அரைத்துப் பெறப்பட்ட விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து நன்கு இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசி, ஒரு மணித்தியாலத்தின் பின்னர் சுத்தமான நீரில் குளித்தல் வேண்டும். தொடர்சியாக மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வரும் போது தடிப்பு மற்றும் அரிப்பு என்பன மறையும்.

மேலும், சுமார் 6 அவுன்ஸ் அளவுள்ள வெற்றிலைச் சாற்றுடன் 35 கிராம் மிளகு சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து, அவ்வாறு ஊறிய மிளகை நன்கு உலர்த்திப் தூளாக்கி கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை தினமும் காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகி வருதல் வேண்டும். முக்கியமாக உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. மக்களே பூரான் கடிதானே என்று அலட்சியம் செய்யாதீர்கள்.

இன்னும், ஆகாச கருடன் கிழங்கினை சிறுசின்னி சாறுடன் கலந்து நன்கு அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை வெய்யில் வராமல் வீட்டிலே இருந்து மூன்று நாள்கள் சாப்பிட்டு வரும் போது பூரான் கடி விஷம் அறவே இல்லாது போகும்;. இதன் போது புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும்.

மேலும், பூரான் க.டி.க்.கு.ச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீண்ட காலமாகிவிட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளித்து வருதல் வேண்டும். 100 கிராம் ஊமத்தம் செடியின் வேரை நன்றாக நைய இடித்து கால் லிட்டர் நல்லெண்ணெயில் நன்கு ஊற போடவும். பின்னர் சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி நன்கு ஊறிய பின்னர் குளித்து வரும் போது உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

By: Tamilpiththan.com

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசெவ்வாய் கிரகத்தில் குண்டு? அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! வீடியோ இணைப்பு!
Next articleராஜா ராணி சீரியல் செம்பாவின் வைரல் வீடியோவை நீங்களே பாருங்க