பாதத்தின் கருமையை போக்க சில டிப்ஸ்.

0

பாதத்தின் கருமையை போக்க சில டிப்ஸ்.

உங்கள் சாக்ஸ் மற்றும் ஷூக்களில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறதா? வெளியிடங்களுக்கு சென்றால், உங்கள் ஷூக்களில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் சங்கடத்திற்கு உள்ளாகிறீர்களா? பெரும்பாலும் கோடைக்காலத்தில் தான் இம்மாதிரியான பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதுவும் எந்நேரமும் கால்களில் ஷூக்களை அணிபவர்கள் தான் இந்த பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள்.

இதற்கு காரணம் அதிகப்படியான வியர்வை தான். கால்களில் போதுமான காற்றோட்டம் இல்லாமல் இருக்கும் போது, அவ்விடத்தில் பாக்டீரியாக்கள் பெருக்கமடைந்து, வியர்வையுடன் சேர்ந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பிரச்சனையைப் போக்க சில இயற்கை வழிகள் உள்ளன. இக்கட்டுரையில் கால்களில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேக்கிங் சோடா
சோடியம் பை கார்பனேட் என்று அழைக்கப்படும் பேக்கிங் சோடா பாதத்தில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கும். இது வியர்வையில் உள்ள pH அளவை நீர்க்கச் செய்து, பாக்டீரியாவைக் குறைக்கும்.

1.வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து, அந்நீரில் 15-20 நிமிடம் பாதங்களை ஊற வையுங்கள். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர, பாத துர்நாற்றம் நீங்கும்.

2.வேண்டுமானால், ஷூக்களில் பேக்கிங் சோடாவைத் தூவி, பின் அணியுங்கள். இதனால் பாதங்களில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.

லாவெண்டர் எண்ணெய்
லாவெண்டர் எண்ணெய் நல்ல நறுமணத்துடன் இருப்பதோடு, பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பாதங்களில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும்.

1.ஒரு அகலமான வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பு, சில துளிகள் லாவெண்டர் எண்ணெய்களை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

2.பின் அந்நீரில் பாதங்களில் 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
3.இப்படி தினமும் 2 முறை என சில நாட்கள் பின்பற்றுங்கள்.

எப்சம் உப்பு
எப்சம் உப்பு பாதங்களில் துர்நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, பாதங்களில் வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

1.ஒரு அகலமான வாளியில் 2 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

2.பின் அதில் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வையுங்கள்.

3.இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

ப்ளாக் டீ
ப்ளாக் டீயில் உள்ள டேனிக் அமிலம், பாதங்களில் துர்நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும்.

1.ஒரு பாத்திரத்தில் 3 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, அதில் 2 டீ பைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளுங்கள்.

2.பின் ஒரு அகலமான வாளியில் கொதிக்க வைத்த நீரை ஊற்றி, வெப்பநிலையைக் குறைக்க சிறிது குளிர்ந்த நீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

3.பின்பு அதனுள் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வையுங்கள்.

4.இப்படி தினமும் ஒரு முறை என ஒரு வாரம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வினிகர்
வினிகர் பாதங்களில் அமிலத்தன்மையை அதிகரித்து, பாக்டீரியாக்களை அழித்து, துர்நாற்றத்தைத் தடுக்கும். எந்த வகையான வினிகரை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

1.ஒரு அகலமான வாளியில் 8 கப் வெதுவெதுப்பான நீரில் ஊற்றி, அதில் 1 1/2 கப் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

2.பின் அதில் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

3.இறுதியில் பாதங்களை சோப்பு பயன்படுத்தி நீரால் கழுவுங்கள்.

சீடர்வுட் ஆயில்
சீடர்வுட் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-செப்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த சீடர்வுட் ஆயிலை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து பயன்படுத்தினால் அற்புதமான நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் பாக்டீரியாக்களை அழிக்கும் மற்றும் இது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

1.5 துளிகள் சீடர்வுட் ஆயிலை 1 டேபிள் ஸ்பூன் விர்ஜின் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

2.பின் அந்த எண்ணெய் கலவையைப் பயன்படுத்தி, பாதங்களை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக இரவில் படுக்கும் முன் செய்வது மிகவும் நல்லது.

3.இந்த செயலை தினமும் ஒருமுறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்தால், பாத துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

போரிக் அமிலம்
போரிக் அமிலம் மற்றொரு அற்புதமான துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் பொருளாகும்.

1.போரிக் அமில பவுடரை வியர்க்கும் பாதங்களில் சில நாட்கள் தூவி வாருங்கள். இப்படி செய்தால் பாத துர்நாற்றம் போய்விடும்.

2.1 1/2 கப் போரிக் அமில பவுடரை 2 கப் வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, நீங்கள் அணியும் ஷூக்களினுள் ஸ்ப்ரே செய்துவிடுங்கள்.

சர்க்கரை ஸ்கரப்

1.3 பங்கு சர்க்கரையுடன், 1 பங்கு நீர் மற்றும் 5 பங்கு ஐசோப்ரோபைல் ஆல்கஹால் சேர்த்து கலந்து கெட்டியான கலவையை தயார் செய்து கொள்ளுங்கள்.

2.பின் அந்த கலவையை பாதங்களில் தடவி 5-10 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்யுங்கள். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்கள் நீங்கிவிடும்.

3.இறுதியில் பாதங்களை நீரால் கழுவுங்கள்.

4.இப்படி வாரத்திற்கு குறைந்தது 3 முறை செய்யுங்கள். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, ஸ்கரப் செய்வதற்கு முன் சிறிது நேரம் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, பின் செய்யுங்கள்.

பேபி பவுடர்/டால்கம் பவுடர்
பாதங்களில் வீசும் துர்நாற்ற பிரச்சனையைக் குறைக்க உதவும் மற்றொரு பிரபலமான வழிகளுள் ஒன்று பேபி பவுடர் அல்லது டால்கம் பவுடரை பாதங்களில் தூவி விடுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை தூவினால் பாதங்களில் வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கலாம். வேண்டுமானால் இந்த பவுடரை ஷூக்களில் தூவிக் கொள்ளலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதாம்பத்தியத்தில் உங்கள் மனைவியை திருப்திப்படுத்த வேண்டுமா? இந்த மூலிகை டீயை தினமும் 1 கப் குடியுங்கள்!
Next articleகீழாநெல்லி இலைகளை அரைத்து மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்.