நேற்யை தினம் பிரித்தானியாவில் கைதான நீரவ் மோடி!

0

இந்தியாவில் அடுத்தமாதம் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்தியாவில் பெரும் நிதிமுறைகேட்டு குற்றச்சாட்டுக்கு இலக்கான தொழிலதிபரும் வைர வியாபாரியுமான நீரவ் மோடி பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கை பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கத்துக்கு சாதகமாக கருதப்படுவதால் அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த வேண்டும் என இந்தியா பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பூர்வீக நாடுகளில் பெருமளவு கடனைப்பெற்று அந்த நாட்டை விட்டு தப்பிச்சென்று வெளிநாடுகளில் வாழும் வணிக பிரபலங்களுக்கு கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தும் அடையாளமாக இந்திய தொழிலதிபர் நீரவ் மோடியின் கைது கருதப்படுகின்றது.

இந்தியத் தொழிலதிபாரான நீரவ் மோதியின் நவீன வைர நகை கடைகள் லண்டன், நியுயோர்க், லாஸ் வேகாஸ், ஹவாய், சிங்கப்பூர், பெய்ஜிங் மற்றும் மக்காவ் ஆகிய இடங்களிலும், இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லியிலும் உள்ளன. ஆனால் அவ்வாறன பெரும்புள்ளி பஞ்சாப் தேசிய வங்கியில் 11 ஆயிரத்து 360 கோடி இந்திய ரூபாய் நிதி மோசடியை செய்தார்.

அவ்வாறு நிதிமோசடி செய்த நீரவ் மோடியை கடந்த ஆண்டு அந்த வங்கி தேடியபோது அவர் பிரித்தானியாவுக்கு தப்பிச்சென்றிருந்தார். நீரவ் மோடியும் அவரது சகாக்களும் செய்த நிதிமோசடி நுட்பமானது. மும்பையில் உள்ள பஞ்சாப்தேசிய வங்கிக் கிளையூடாக ஹொங்கொங்கில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த ஆண்டு முதலே இந்த விடயம் பரபரப்பாக சுழன்றிருந்தது. இந்திய பங்குச் சந்தையிலும் பஞ்சாப்தேசிய வங்கி சரிந்தது. இந்தநிலையில் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றத்தின் பிடியாணைப்படி நீரவ் மோடி நேற்று லண்டனில் கைது செய்யப்பட்டதாக பிரித்தானிய காவற்துறை அறிவித்தது.

மத்திய லண்டனில் உள்ள ஹோல்போன் பகுதியில் நீரவ் மோடி கைது செய்யப்பட்டதையடுத்து இந்திய அமலாக்கத்துறையும் சுதாகரித்தது. நேற்றைய தினம் பகல் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்ட அவர் மீதான இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 29 திகதியன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்த வேண்டும் என இந்திய அரசாங்கம் பிரித்தானிய அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்திருப்பதால் இது குறித்த அடுத்தகட்ட நகர்வை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தீர்மானிக்கக்கூடும்.

லண்டனில் இந்தக் கைது இடம்பெற்ற நிலையில் இந்தியாவில் நீரவ் மோடிக்குச் சொந்தமான ஆடம்பர வீடு மற்றும் ஓவியங்களை ஏலத்தில் விட அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால் இவ்வாறான ஏலங்கள் மூலம் நீரவ் மோடி ஏப்பம் விட்ட சுமார் 11 ஆயிரத்து 360 கோடி ரூபாயை தேடிக்கொள்ளவே முடியாதென்பதும் வெளிப்படையானது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காட்சி! இறுதி வரையும் பாருங்கள்! என்ன ஒரு வில்லத்தனம்!
Next articleபெண்களை அடைவதற்காகவே கல்லூரியை நடத்தி வந்த நபர்! விடுதியில் ரகசிய கமெரா! பகீர் பின்னணி தகவல்!