நகரப்புறத்தினருக்கு உண்டாகும் முக்கிய பாதிப்பு எது தெரியுமா!

0

காலைக்கடனை இனிதே தொடங்குவது இயற்கை காட்டும் வழி. ஆனால் பிரச்சனைகளுடன் தொடங்குவது நகரத்தினர் உருவாக்கிக் கொண்ட வழி. ஆமாம் மலச்சிக்கலால் நகரத்தினர் பெரும்பான்மையோனோர் பாதிக்கப்படுகிறார்கள். அதுவும் நீண்ட கால மலச்சிக்கலால் அவர்களின் இயல்பு நிலை பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் இது அதிகரித்திருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

சுமார் 14 சதவீத நகர்ப்புற மக்கள் நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள் என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதில் 60 சதவீத மக்கள் தங்கள் பிரச்சனையை நிவர்த்தி செய்து கொள்ள மருத்துவரை நாடுகிறார்கள். சிலர் சுய மருந்தினை எடுத்துக் கொள்கிறார்கள் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

இந்த மலச்சிக்கலால், தூக்கமின்மை, உடல் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கபடுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் போதிய அளவு வேலையில் ஈடுபாடில்லாமல் இருப்பது, கவலைகள் அடிக்கடி மன நிலை மாறுபடுவது என இயல்பான நிலை பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

இந்தியா முழுவம் உள்ல சில முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, லக்னோ, கல்கத்தா, ஹைதராபாத், கோவை ஆகிய இடங்களில் , மலச்சிக்கலால் பாதிக்கப்படும் சுமார் 3500 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதில், உலகளவில் இந்தியாவில்தான் மலச்சிக்கலால் பாதிப்படைந்தவர்கள் 10 சதவீதம் அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

காரணங்கள் :
இதற்கு முக்கிய காரணங்கள், அதிகமாக அசைவ உணவு சாப்பிடுவது, மசாலா மற்றும் எண்ணெய் உணவுகளை சாப்பிடுவது, போதிய நீர் குடிக்காமலிருப்பது, உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மலச்சிக்கலால் வரும் பிரச்சனைகள் :
மலச்சிக்கல் தொடர்ந்தால், பைல்ஸ் , ஆசன வாயில் ரத்தக் கசிவு, அல்சர், ஃபிஷர் ஆகிய பாதிப்புகள் உண்டாகிறது. ஆரம்ப கட்டத்தில் இந்த பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் செய்து கொள்கிறார்கள்.

இறுதியில் பிரச்சனை தீவிரமாகும்போதுதான் மருத்துவரை நாடுகிறார்கள். இதனால் பாதிப்புகள் இரட்டிப்பாகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த சர்வே அபாட் மற்றும் இப்ஸாஸ் ஆகிய இரு மருந்தக நிறுவனங்களால் நடத்தப்பட்டது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமஞ்சளை சேர்த்துக் கொண்டால் இந்த புற்றுநோய் வராது!
Next articleவெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்ன!