தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு என்ன முதலுதவி செய்தால் உயிர் பிழைக்க வைக்கலாம்?

0

ஒரு குழந்தை தெரியாமல் தண்ணீருக்குள்ளோ அல்லது யாரும் இல்லாத சமயத்தில் தண்ணீர் தொட்டிக்குள்ளோ விழுந்து விட்டால் உடனே என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டப்படுவோம். வெளியில் தூக்கிய உடன் நமக்குத் தெரியாமல் ஏதாவது செய்வோம். மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடிவிடுவோம். ஆனால் அதற்கு முன் நாம் செய்ய வேண்டிய சில முக்கிய முதலுதவிகள் பற்றி நமக்குத் தெரிவதே இல்லை. அப்படி தண்ணீருக்குள் விழுந்த குழந்தையை வெளியே எடுத்து என்ன மாதிரியான முதலுதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.

பொதுவாக குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய ஆபத்து பற்றி எதுவும் அவர்களுக்குத் தெரியாது. அதனால் பெரியவர்களை விடவும் சின்ன குழந்தைகளுக்கு தண்ணீரால் எப்போதும் பாதிப்புகள் அதிகம். அதனால் கவனக்குறைவாக சென்று நம்முடைய வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியிலோ அல்லது கழிவறைத் தொட்டியிலோ விழுந்து விடுவது உண்டு.

இதுபோன்ற சமயங்களில் குழந்தைகளால் மூச்சுவிட முடியாது. குழந்தைகளுடைய வாய், மூக்கு வழியாக நுரையீரல் மற்றும் வயிற்றுக்குள் நிறைய தண்ணீர் உள்ளே போய்விடும். இதில் நுரையீரலுக்குள் தண்ணீர் போய்விட்டால் அது உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். இதனால் தொடர்ந்து மூச்சுவிட முடியாததால் மூளைக்குச் செல்கின்ற ஆக்சிஜன் தடைபட்டு குழந்தை மயக்கநிலைக்கு போய்விடும்.

தண்ணீருக்குள் இருந்து குழந்தையை வெளியே எடுத்ததும் முதலில் சுவாச ஓட்டம் மற்றும் நாடித் துடிப்பை சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். குழந்தை மூச்சு விடவில்லை என்றால் செயற்கை சுவாசம் அளிக்கலாம். குழந்தையை மல்லாந்த நிலையில் படுக்க வைத்து அதன் வாயோடு நமது வாயைப் பொருத்தி வைத்து மிகவும் பலமாக ஊத வேண்டும். இப்படி செய்வதால் நம் வாய்வழியாக அனுப்பப்படுகின்ற காற்று குழந்தையினுடைய மூச்சுக்குழல் அடைப்பை உடனடியாக சரிசெய்து விடும்.

ஒருவேளை குழந்தைக்கு இதயம் செயல்படாமல் இருந்தால் நாடித் துடிப்பு இருக்காது. உடனடியாக குழந்தையின் நெஞ்சுப் பகுதியின் நடுவில் இரண்டு விரல்களை வைத்து நன்றாக ஊன்றி அழுத்த வேண்டும். இப்படி அழுத்தும் போது சட்டென இதயம் துடிக்க ஆரம்பித்துவிடும். நுரையீரலில் தேங்கியிருக்கிற தண்ணீரும் வெளியேற ஆரம்பி்க்கும்.

இவ்வளவு நேரம் சொன்னது குழந்தைகளுக்கு. இதுவே பாதிக்கப்பட்டவர் பெரியவர்களாக இருந்தால் செயற்கை சுவாசம் கொடுப்பதோடு அவருடைய மார்பின் சீவில் நம்முடைய உள்ளங்கைகளை வைத்து நன்கு அழுத்த வேண்டும். விட்டு விட்டு வேகமாக அழுத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தெரியாமல் கூட வயிற்றுப் பகுதியை அழுத்தக் கூடாது. தண்ணீரில் மூழ்கியவரைக் காப்பாற்றுகிற பொழுது, பாதிப்பக்கப்படவருடைய தலையை தண்ணீர் மட்டத்துக்கும் மேலே இருக்கும்படி தூக்கிப் பிடித்திருக்க வேண்டும். சுவாசம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துவிட்டு உடனே செயற்கை சுவாசம் கொடுக்கலாம்.

பொதுவாகவே தண்ணீருக்குள் விழுந்து விட்டால் அவர்கள் இறந்து விடுவார்கள். முதலுதவி செய்து பயன் இல்லை என்று பயந்து விட்டுவிடுகிறோம். ஆனால் அது தவறு. மூச்சு, இதயம் இரண்டும் தற்காலிகமாகக் கூட செயல்படாமல் இருக்கும். அதனால் பதட்டப்படாமல் முதல் உதவி செய்யுங்கள். தண்ணீரில் விழுந்து ஒரு மணி நேரம் வரை கூட பாதிக்கப்பட்டவருக்கு மேற்கண்ட முதலுதவிகள் செய்து உடனே மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றால் காப்பாற்றி விட முடியும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகலவியில திருப்தி இல்லைனு கவலைப்படறீங்களா? இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க ஜோரா இருப்பீங்க !
Next articleமகனுடன் சண்டை போடும் விஜய் சேதுபதி! வைரலாகும் காணொளி!