என் மகிழ்ச்சிக்காக நான் இரையாக்கிய ஜீவன் அவள்.! என் வாழ்க்கையில அந்த நியூ இயர் மட்டுமில்ல..!

0

என் மகிழ்ச்சிக்காக நான் இரையாக்கிய ஜீவன் அவள்.! என் வாழ்க்கையில அந்த நியூ இயர் மட்டுமில்ல..!
நான் பார்க்க அப்பா மாதிரியே இருக்கேன்னு பார்க்குற எல்லாரும் சொல்வாங்க. ஆனா, நான் என் அப்பாவ பார்த்ததே இல்லை. என் நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து, எனக்கு அப்பாவா, அம்மாவா இருந்தது என் அம்மா தான். ஆனா, நான் அவங்கள அம்மான்னு கூட கூப்பிட்டது இல்லை. சொல்லப் போன வள்ளி என்னோட க்ளோஸ் ஃபிரெண்ட். வள்ளி… அவங்க தான் என் அம்மா.

அவங்க எனக்கு எல்லாவுமா இருந்தாங்க. பதிலுக்கு நான் அவங்களுக்கு ஒரு நல்ல மகனாவாவது இருந்திருக்கணும். அதக்கூட நான் ஒழுங்கா பண்ணல. இன்னிக்கி நான் தனியா இருக்க ஒட்டுமொத்தக் காரணாம் நான் தான். வாழ்நாள் முழுக்க அவங்களுக்கு நல்ல மகனா இருந்தனான்கிறதவிட… குறைந்தபட்சம் அன்னிக்கி ஒரு நாள் நான் அவங்களுக்கு நல்ல மகனா இருந்திருந்தா… அவங்க இன்னிக்கி என்கூட இருந்திருப்பாங்க.

என் மகிழ்ச்சிக்காக
என் மகிழ்ச்சிக்காக

நாயகி!
யாராச்சும் உனக்கு பிடிச்ச ஹீரோயின் யாருன்னு கேட்டா… கூச்சப்படாம என் அம்மா வள்ளின்னு சொல்வேன். நிஜமாவே அவங்க ஒரு நாயகி தான். அவங்க வாழ்க்கைக்கோ, என் வாழ்க்கைக்கோ மட்டுமில்ல… புருஷன் இல்லாம, தன்னோட பிள்ளைங்கள தனியாளா நின்னு வளர்க்குற ஒவ்வொரு பொண்ணுக்கும் வள்ளி மாதிரி ஒருத்தவங்கள நாயகியா தான் பார்ப்பாங்க. எங்க தெருவுல இருந்த பலர் என் காதுப்பட சொன்ன விஷயம் இது. “ஒத்தையாளா இருந்து எப்படி வாழ்ந்து காட்டுறா பாரு அவ”ன்னு மெச்சி பேசுவாங்க.

அப்பா!
ஒரு நாள் வேலை விஷயமா வெளியூர் போயிட்டு வந்து சோர்வா இருக்குன்னு படுத்து தூங்குனாராம் அப்பா. அதுக்கப்பறம் அவரு எழுந்திருக்கவே இல்லன்னு வள்ளி அப்பப்போ சொல்லுவா. சில சமயம் நான் தூங்கிட்டனான்னு பார்த்துட்டு… அப்பாவோட படத்த மடியில வெச்சுக்கிட்டு அழுவா. நான் அப்பா இல்லன்னு கண்கலங்கிடக்கூடாது.., மனசு நொந்துப் போகக் கூடாதுன்னு தன்னோட சோகத்தை கூட என் முன்னாடி காமிச்சுக்காம வாழ்ந்தவ வள்ளி.

கஷ்டம்!
சொந்த வீடு, அப்பாவோட சேமிப்பு, வள்ளியும் வேலைக்கு போயிட்டு இருந்ததால… எனக்கோ வள்ளிக்கோ சாப்பாடு, தங்க இடம்ன்னு எந்த கஷ்டமும் இருந்ததில்ல. ஆனா, வேற கஷ்டம் எல்லாம் இருந்துச்சு. திடீர்ன்னு யாரவது வீட்டுக்குள்ள எகிறிக் குதிக்கிற மாதிரி இருக்கும். சில சமயம் கல்லுவிட்டு எறிவாங்க. யாருன்னே தெரியாது. எங்க ஏரியாக்குள்ள வெளியாளுங்க வர வாய்ப்பே இல்ல. அதனால, யாரு மேல சந்தேகப்படுறதுன்னும் தெரியாது.

கூந்தல்!
வள்ளியோட பெரிய அழகே கூந்தல் தான். ரொம்ப அழகா இருப்பா வள்ளி. ஆனால், நிறையா பேரு தப்பா பாக்குறாங்கன்னு ஹேர்கட் பண்ணிக்கிட்டா. வள்ளியோட ஹேர்கட்க்கு இது தான் காரணம்ன்னு சின்ன வயசுல எனக்கு தெரியல. கொஞ்சம் புரிதல் வந்த பிறகு தான், வள்ளி என்னென்ன கஷ்டம் எல்லாம் கடந்து வந்திருக்கான்னு புரிஞ்சது.

தாத்தா – பாட்டி
எங்களுக்கு துணைன்னு யாரும் இல்ல. வள்ளியும் அப்பாவும் 90s-லயே லவ் மேர்ஜ். ரொம்ப எதிர்ப்பு. அதனால தான் ஊரைவிட்டு சென்னை வந்துட்டாங்க. அப்பா இறந்த போதும் கூட பெரிசா சொந்தக் காரங்க யாரும் வரல. வள்ளியோட அப்பா, அம்மா ரொம்பவே கௌரவம் பாக்குறவங்க. அதனால், அவங்க கூட பேசினது கூட இல்ல. அப்பா வழி தாத்தா – பாட்டி மட்டும் வருஷத்துக்கு ஒருமுறை வருவாங்க. நாங்களும் ஊருக்கு போயி பார்த்துட்டு வருவோம்.

அவங்களும் எனக்கு 13 வயசு இருக்கும் போது இறந்துட்டாங்க.

நான் இரையாக்கிய ஜீவன்
நான் இரையாக்கிய ஜீவன்

ஜிம்!
11 படிக்கும் போது நான் ஜிம்முக்கு போக ஆரம்பிச்சேன். அப்போ இருந்து தான் எங்க வீட்டுகுள்ள கல்லு விழுறதும் கம்மியாச்சு. ஜிம்முக்கு போறது ஒரு வேலையா இருந்து பின்ன ஆர்வமா மாறுச்சு. அப்படியே கொஞ்சம், கொஞ்சமாக ஒரு மாடர்ன் வாழ்க்கைய அனுபவிக்க ஆரம்பிச்சேன். நான் கேட்குற எதையும் மாட்டேன்னு வள்ளி சொன்னதே இல்லை. பைக்ல இருந்து ஸ்மார்ட் போன் வரைக்கும் எல்லாமே கிடைச்சது.

காலேஜ்!
காலேஜ் முதல் இரண்டு வருஷம் பண்ணாத லூட்டி இல்ல. என் கிளாஸ் பசங்களவிட, சீனியர் பசங்க கூட தான் அதிகமா இருப்பேன். ஆனா, என்ன லூட்டி பண்ணாலும். ஈவ்னிங் சீக்கிரம் வீட்டுக்கு போயிடுவேன். ஏன்னா, வள்ளி ஆபீஸ் முடிச்சு ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடுவா. வள்ளி வீடு ரீச் ஆகும் போது, நானும் அங்க இருக்கனும். பயம்ன்னு எல்லாம் எதுவும் இல்ல. ஸ்கூல் படிக்கும் போது வள்ளி தான் வந்து என்ன கூட்டிட்டு போவா. அப்ப இருந்தே, நாங்க ஒண்ணா வீட்டுக்கு போய் பழகிட்டோம்.

நட்பு!
காலேஜ் நாட்கள்ல எனக்கு லவ்ன்னு எதுவும் வந்ததில்ல. ஆனா, ஃபிரெண்ட்ஸ் கணக்கே இல்ல. அடிக்கடி என் ஃபிரெண்ட்ஸ் கிட்ட சொல்லுவேன், ஒருவேளை நீங்க என்கூட இல்லன்னு, நானும் யாரையாச்சும் லவ் பண்ணிருப்பேன்னு. சிரிச்சுக்கிட்டே… நாங்க கூட இருக்க வரைக்கும் உனக்கு அப்படி ஒரு கஷ்டம் வந்திடாது மச்சான்னு சொல்வானுங்க. அதுமில்லாம, எப்படியும் வள்ளியே எனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்ப்பான்னு எனக்கொரு தைரியம் இருந்துச்சு.

வேலை!
பெங்களூர், மும்பைன்னு வெளியிடங்கள பல நல்ல வேலை கிடைச்சும். வள்ளி கூட இருக்கனும்ன்னு சென்னையிலேயே கிடைச்ச ஒரு சின்ன வேலையில ஜாயின் பண்ணேன். என்னோட நாட்கள்ல துன்பம்ன்னு ஒன்னு வந்ததே இல்ல. அதுக்கு காரணம் வள்ளி அப்பறம் என்னோட ஃபிரெண்ட்ஸ்.

சில சமயம் என் கூட வேலை பண்றவங்க கேட்பாங்க… உனக்கு கோபம் வராதா? உன் வாழ்க்கையில சோகமே இல்லையா? எப்பவுமே எப்படி சிரிச்சுட்டே இருக்கன்னு.

என் வாழ்க்கையில சோகம் இருந்துச்சு. ஆனா, என்னோட வள்ளியும், ஃபிரெண்ட்ஸ்ம் அத உணரவிடலங்கிறது தான் உண்மை

என் கண்ணீர் கதை.
என் கண்ணீர் கதை.

கெட்டப் பழக்கம்!
தம்மு, குடின்னு எந்த தப்பும் பண்ணது இல்ல. அது என்னோட பாடி பில்டிங்க்கும் ஒத்துவராது. ஆனா, எப்பயாவது ஒருமுறை ஃபிரெண்ட்ஸ் ரொம்ப கட்டாயப்படுத்துனா பீர் மட்டும் குடிப்பேன். வருஷத்து ஒன்னு, ரெண்டு தான் அதுவும். இது வள்ளிக்கும் தெரியும். வள்ளிக்கு தெரியாம நான் எதுவுமே பண்ணது இல்ல. மேக்ஸிமம் ஒவ்வொரு நியூ இயர் நைட்டும் என்னோட லிஸ்ட்ல இருக்க அந்த வருஷத்துக்கு ரெண்டு பீர்ல ஒன்னு குடிச்சிடுவேன்.

2014!
அப்படி தான் அந்த 2014 நியூ இயரும் வந்துச்சு. எப்பவுமே என்னோட ஃபிரெண்ட்ஸ் கூட நியூ இயர்க்கு வெளிய போகும் போது வள்ளி என்ன தடுத்ததே இல்லை. வள்ளிய வீட்டுல விட்டுட்டு நானும் நைட்டு தனியா வெளிய போனதே இல்லை. முதல் தடவையா…, நியூ இயர்நைட் வள்ளி இன்னிக்கி வீட்லயே இருன்னு சொன்னா…, ஃபிரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்றாங்க. ஒரு மணிக்கெல்லாம் வந்திருவேன்னு வள்ளி சொல்றத கேட்காம நான் கிளம்பி போனேன்.

பார்ட்டி! நான் வீட்டுல இருந்து கிளம்பும் போது மணி இராத்திரி எட்டு இருக்கும். ஊரெல்லாம் பைக்குல சுத்திட்டு. கரக்ட்டா நைட்டு 12 மணிக்கு நாடு ரோட்டுல கேக் கட் பண்ணிட்டு நியூ இயர் கொண்டாட ஆரம்பிச்சோம். நான் அன்னிக்கி பீர் கூட குடிக்கல. ஆனா, ஃபிரெண்ட்ஸ் கூட நியூ இயர் கொண்டாட்டம் 2 மணி வரைக்கும் இழுத்திடுச்சு. என் வாழ்க்கையில அந்த நியூ இயர் மட்டுமில்ல, இனிவர எந்த நியூ இயர்லயும் மறக்க முடியாத காயத்த அந்த 2014 நியூ இயர் கொடுத்துட்டு போயிடுச்சு

மகிழ்ச்சிக்காக நான்
மகிழ்ச்சிக்காக நான்

வள்ளி! வீட்டுக்கு போய் கதவ தட்டுனேன்… வள்ளி கதவ திறக்கல. வள்ளிக்கு கால் பண்ணேன். வீட்டுக்குள்ள ரிங் போற சத்தம் கேட்குது ஆனா, வள்ளி கால் எடுக்கல. பத்து தடவைக்கு மேல கால் பண்ணியிருப்பேன். எந்த ரெஸ்பான்ஸ்ம் இல்ல. 20 நிமிஷம் இருக்கும். அதுக்கப்பறம்… நம்ம வீடு தானேன்னு.. சுவர் ஏறி குதிச்சு உள்ளே போனான். காலிங் பெல் அடிச்சும் வள்ளி எழுந்திருக்கல. வள்ளி போனுக்கு கால் பண்ணிட்டே, பெட்ரூம் ஜன்னல் வழியா எட்டி பார்த்தேன். வள்ளி சாதாரணமா படுத்து தூங்கிட்டு இருந்தா. ஜன்னல திறந்து வள்ளி, வள்ளின்னு கத்துனேன். ஆன, வள்ளி எழுந்திருக்கவே இல்ல.

எழுந்திருக்க மாட்டா இனி… அப்பறம் பதட்டத்துல கதவ உடைச்சுட்டு உள்ளே போய் பார்த்தப்ப தான். வள்ளி இனிமேல் எழுந்திருக்கவே மாட்டான்னு தெரிஞ்சுது. ஃபர்ஸ்ட் அட்டாக்ன்னு டாக்டர் சொன்னாங்க. உடனே முதலுதவி பண்ணியிருந்தா ஈஸியா காப்பாத்தியிருக்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னாரு. வள்ளி சொன்ன மாதிரி, நான் அன்னிக்கி அங்கேயே இருந்திருந்தா… வள்ளி என்கூட இருந்திருப்பா. இனிமே, வள்ளி சொன்ன மாதிரி எத்தன நாள் நான் வீட்ல இருந்தாலும் வள்ளி திரும்பி வரபோறது இல்ல.

அம்மா! சில சமயம் மூளைக்கு எட்டுற விஷயங்கள், மனசுக்கு எட்டுறதே இல்ல. எல்லாரும் இதுதான் இயற்கை. என்ன பண்ண முடியும்? அதையே நினைச்சுட்டு இருக்காதன்னு சொல்றாங்க. ஆனா, வள்ளி எனக்காக எத்தனயோ பண்ணியிருக்கா. நான் அவ சொன்ன ஒரே ஒரு விஷயம் பண்ணாம விட்டு, அவள தொலைச்சுட்டேன். வள்ளி, வள்ளின்னு கூப்பிட்டே பழகிட்டேன். இப்பதா.. யாராவது “உங்க அம்மா என்ன பண்றாங்கன்னு?” கேட்டா.. “இல்ல… அம்மா இல்ல… இறந்துட்டாங்கன்னு…” வள்ளி இறந்தத பத்தி சொல்லும் போது மட்டும் தான் “அம்மா”ன்னு வாயில வருது. கூடவே, கண்ணுல கண்ணீரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெரும்பாலான நேரங்களில் இங்கே திருப்தி தான் முக்கியம் இதற்குமேல் நீங்களே பாருங்க!
Next articleஅன்று இருவரும் சேர்ந்து எடுத்த அந்த நெருக்கமான புகைப்படம் தான் எங்களது காதலை சிதைத்தது!