பெண்களின் கண்களின் அசைவுகளை வைத்தே அவர்களின் எண்ணங்களின் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும். எப்படி தெரியுமா?

0

பெண்களின் கண்களின் அசைவுகளை வைத்தே அவர்களின் எண்ணங்களின் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும். எப்படி தெரியுமா?

பல மொழிகளை அறிந்தவர்கள் பலர் இருந்தாலும் கண்கள் பேசும் வார்த்தைகளை அறிய முடியாது. ஒருவருடைய‌ கண்களை வைத்தே அவர் என்ன கூற வருகிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். பெரும்பாலும் காதலிக்கும் போது பெண்கள் கண்களால் தான் பேசுவார்களாம். இது குறித்து அறிவியல் ரீதியாக சில உண்மைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கண்கள் பேசும் வார்த்தைகள் குறித்து அறிவியல் ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகளை காண்போம்.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது என்றும் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது என்றும் அர்த்தமாம்.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது என்றும் கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது என்றும்

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது, ஆசைப்படுகிறது என்றும் கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது என்றும் அர்த்தமாம்.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது என்றும் கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது என்றும் அர்த்தமாம்.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது என்றும் கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது என்றும் அர்த்தமாம்.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது என்றும் கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம் என்றும் கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல் என்றும் அர்த்தமாம்.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது என்றும் கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது என்றும் அர்த்தமாம்.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது என்றும் கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது என்றும் அர்த்தமாம்.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் காம வயப்படுகிறது என்றும் கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது என்றும் அர்த்தமாம்.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது என்றும் கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது என்றும் அர்த்தமாம்.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது என்றும் கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது என்றும் அர்த்தமாம்.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது என்றும் கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை என்றும் அர்த்தமாம். கண்களும் புருவங்களும் சேர்ந்து சுருங்கியிருந்தால் கோபம் என்றும் அர்த்தமாம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்க மொபைல் தண்(ணீரில்) விழுந்து விட்டதா? உடனே இப்படி செய்யுங்க ஒண் ஆகிடும்.
Next articleகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் ஓவியா.