உங்களுக்கு தீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா!

0

வேதங்களில் கூறியுள்ளபடி கனவுகள் என்பது நமது ஆழ்மனதில் புதைந்துள்ள ஆசைகளின் வெளிப்பாடாகும், தற்கால அறிவியலும் கூட இதைத்தான் சொல்கிறது. அன்றாட வாழ்வில் இருக்கும் நம்முடைய நிறைவேறாத ஆசைகள் மற்றும் நிகழ்வுகள் நமது ஆழமனத்துக்குள் ஒளிந்திருக்கும், நாமே எதிர்பார்க்காத தருணத்தில் அது கனவாக வெளிப்படும்.

நமது முன்னோர்கள் நமது எதிர்காலத்தை முன்கூட்டியே காட்டும் கண்ணாடி என்று கூறுகிறார்கள். அவர்களின் கூற்றுப்படி உங்களுக்கு வரும் ஒவ்வொரு கனவும் உங்களின் எதிர்காலத்தை பற்றிய ஒரு குறிப்பை உங்களுக்கு கொடுக்கும், அதனை சரியாக புரிந்து கொள்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. பொதுவாக அதிர்ஷ்டம், பணவரவு, துக்க நிகழ்வுகள், நஷ்டம் போன்றவற்றை கனவுகள் முன்கூட்டியே வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

நல்ல கனவுகளோ அல்லது கெட்ட கனவுகளோ இரண்டுமே நமது ஆன்மா மீது நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் அதிகாலையில் வரும் கனவுகள் பழிக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. ஆனால் உண்மையில் விடிந்தவுடன் நமது நினைவில் இருக்கும் கனவுகள் நிச்சயம் பலிக்கும் என்று நமது முன்னோர்கள் கூறுகிறார்கள். நாம் எழுந்த பிறகும் கனவுகள் நமது மீது பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும்.

நமது முன்னோர்களை பொறுத்தவரை கனவுகள் நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடியவை. நல்ல கனவுகள் வந்தால் அது பலிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கம், ஆனால் அதற்கு நாம் சிலவற்றை செய்யாமல் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் செய்யும் சில தவறுகள் உங்களின் கனவை பலிக்கவிடாமல் செய்யக்கூடும்.

தங்களுக்கு வந்த நல்ல கனவை பற்றி யாரிடம் சொல்லக்கூடாது என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் உங்களின் நல்ல கனவை பற்றி மற்றவர்களிடம் கூறுவதோ, விவாதிப்பது கூடாது. தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் கனவு நியாபகம் இருந்தால் விநாயகரை வழிபடுங்கள்.

பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும் அதிகாலையில் காணப்படும் கனவானது அடுத்த பதினைந்து நாட்களுக்குள் பலிக்கும் என்று கூறப்படுகிறது. உங்கள் கனவுகள் பலிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் போது அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள தயாராகுங்கள்.

இரவின் முதல் பாதியில் காணும் கனவானது அடுத்த ஒரு வருடத்துக்குள் பலிக்கும் என்று மத்யாச புராணம் கூறுகிறது. அதேசமயம் இரவின் இரண்டாம் பாதியில் காண்பது கனவு நிறைவேற ஆறு மாதங்கள் ஆகுமாம்.

நீங்கள் வெளியே கூறாத நல்ல கனவுகள் நிச்சயம் பலிக்கும் என்று மத்யாச புராணம் கூறுகிறது. பெரும்பாலும் நமக்கு காலை நேரத்தில் வரும் கனவு மட்டும்தான் நினைவில் இருக்கும். ஒருவேளை இரவின் முதல் பாதியிலோ அல்லது இரண்டாம் பாதியிலோ வந்த கனவு நினைவில் இருந்தால் அது விரைவில் பலிக்கும். அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் வரும் கனவுகள் 3 மாதத்துக்குள் பலிக்கும் என்று புராணங்கள் கூறுகிறது.

நல்ல கனவுகளை கண்ட பின் நீங்கள் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் உங்கள் கைகளை சேர்த்து வைத்து பார்க்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகிறது. உங்கள் பெற்றோரின் பாதத்தை பார்ப்பது கூட நல்லதுதான் என்றும் கூறப்படுகிறது. நல்ல கனவுகள் போல கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க செய்யவும் சில வழிகள்.

ஒருவேளை உங்கள் கனவில் துர்சம்பவங்கள் நிகழ்ந்தாலோ அல்லது உங்களுக்கு விருப்பமில்லாத செயல்கள் ஏதாவது நிகழ்ந்தாலோ அது பலிக்கக்கூடாது என்பதுதான் உங்கள் விருப்பமாக இருக்கும். அப்படியிருக்கையில் அந்த கனவை மற்றவர்களிடம் சத்தமாக கூறுங்கள்.

ஒருவேளை மோசமான கனவு வந்தால் எழுந்தவுடன் நேராக குளிக்க சென்று விடுங்கள். குளித்து விட்டு சிவபெருமானை நினைத்து சிறிது நேரம் தியானம் செய்யுங்கள். அதன்பின் துளசி செடிக்கு தண்ணீர் விட்டு அதன் முன் உங்கள் கனவை பற்றி கூறுங்கள். இது உங்களின் கெட்ட கனவை பலிக்காமல் தடுக்கும் என்று மத்யாச புராணம் கூறுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாரும் அழ வேண்டாம்..! நான் பிறந்ததே இறக்கத் தான்! மனதை உருக்கும் உயிரிழந்த வீரனின் கடிதம்!
Next articleஎண்ணெய் வழிந்தவாறே அசிங்கமாக இருக்கும் முகத்தை அழகாக்க சில இயற்கை முறைகள்!