இன்றைய ராசிபலன் 1.6.2018 வெள்ளிக்கிழமை !

0

இன்றைய ராசிபலன் 1.6.2018 வெள்ளிக்கிழமை !

1.6.2018 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் வைகாசி மாதம் 18-ம் நாள்.
தேய்பிறை திருதியை திதி மறுநாள் பின்னிரவு 1.26 வரை பிறகு சதுர்த்தி திதி. மூல நட்சத்திரம் காலை 6.03 வரை பிறகு பூராடம். யோகம்: அமிர்தயோகம் காலை 6.03 வரை பிறகு சித்தயோகம்.
குளிகை: 7:30 – 9:00
சூலம்: மேற்கு.
பொது: திருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் புதிய வெள்ளி ரதத்தில் பவனி, மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் திருவீதிவுலா.

பரிகாரம்: வெல்லம்.

நல்ல நேரம் 6-9, 1-3, 5-6, 8-10.
எமகண்டம் மாலை மணி 3.00-4.30.
இராகு காலம் காலை மணி 10.30-12.00.

மேஷம் : மகிழ்ச்சி
ரிஷபம் : எண்ணம்
மிதுனம் : அந்தஸ்து
கடகம் : வரவு
சிம்மம் : செயல்
கன்னி : நிகழ்வு
துலாம் : பேச்சு
விருச்சிகம் : அத்தியாயம்
தனுசு : கவலை
மகரம் : உணர்வு
கும்பம் : காரியசித்தி
மீனம் : ஆசி

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டா ரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

மிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவின ர்களால் ஆதாயமும் உண்டு. பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதி காரிகள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசி ப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் மரியாதைக் கூடும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகம் செய்வோர் முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

மகரம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப் படுத்தி பேசுவார்கள். வாகனம் பழுதாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.

கும்பம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையா ளர்களாவார்கள். உத்யோகத்தில் பாராட்ட ப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மீனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிற ந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோக த்தில் கடினமான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த மாதிரி ஆண்களுக்கு அந்த விடையத்தில் முழு திருப்தி கிடைக்காதாம்..!
Next articleஇளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்!