இது உங்களது உடம்பில் இருந்தால் கொசு கிட்டவே நெருங்காதாம்! கொசுவைப் பற்றி தெரியாத பல ரகசியம் இதோ!

0

இந்த உலகத்தின் ஆதி காலத்தில் இருந்து இருந்து வருகின்ற முக்கிய உயிரனங்களுள் ஒன்று கொசு. அந்த கொசு என்றால் நமக்கு என்ன தெரியும்? அது நம்மைக் கடித்து, உடலில் இருக்கின்ற ரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிடும்.

மலேரியாவால் உயிரியைக் கொன்று விடும் அளவுக்கு கொடூரமானது தான் என்றுதான் நமக்குத் தெரியும். அது தவிர, கொசுவைப் பற்றிய இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றித் தான் இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.

கொசுவின் பற்கள்

கொசுவோட எடையே வெறும் 46 மில்லி கிராம் தான். ஆனால் கொசுவிற்கு மொத்தம் எத்தனை பற்கள் இருக்கின்றன என்று தெரியுமா? ஆமாங்க மனிதர்களுக்கு 32 பற்கள் தான். ஆனால் கொசுவிற்கு மொத்தம் 47 பற்கள் இருக்குமாம்.

மழையில்

மழையில் நனையாமல் மழைத்துளிகளின் இடுக்குகளுக்கு இடையிலேயே பறக்கக்கூடிய பறவையினம் என்றால் அது கொசு தான். ஆமாங்க. மழை வரும்போது, கொசு நனையவே நனையாதாம்.

ரத்தம் உறிஞ்சி கொலை

சில வாரங்கள் மட்டுமே ஆயுளைக் கொண்ட கொசுக்கள் ஒரு வருடத்திற்கு கிட்டதட்ட 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கிறதாம் கொசுக்கள். அதுமட்டுமில்லங்க. ஒரு விநாடிக்கு மட்டுமே 300 முதல் 600 வரையில் வேகமாகச் சிதறித்துப் பறக்குமாம்.

வகைகள்

கொசுவில் ஆண் கொசு, பெண் கொசு என்று இரண்டு தான் இருக்கின்றது என்று நினைக்கிறீர்கள். ஆனால் கொசுக்களின் வகைகள் கிட்டதட்ட 3000 ஐத் தாண்டி இருக்கிறதாம். அதில் 80 வகை மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளுமாம்.

அதேபோல் கொசு முட்டையிலிருந்து கொசுவாக வெளி வருவதற்கு 5 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளுமாம். முட்டையிலிருந்து வெளிவந்த சில மணி நேரங்களிலேயே கொசுவால் இனப்பெருக்கம் அடைய முடியும். கொசுவுக்கு கத்தி போன்ற கூரிய ரத்த உறிஞ்சுக்குழல் உண்டு.

அறிவிப்புகள்

சிறிய அளவில் இருந்தாலும் கூட, உலகின் மிக அபாயகரமான பூச்சியினம் என்று அறிவிக்கப்பட்ட பூச்சிகளில் ஒன்று தான் இந்த கொசு.

சைவமா? அசைவமா?

இது என்னங்க கேள்வி. அதான் ரத்தத்தை உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்குமே என்று நீங்கள் கேட்கலாம். அங்க தான் டுவிஸ்ட்டே இருக்கு. ஆண் கொசுக்கள் சைவம் தானாம். அதற்குத் தேவையான உணவு மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை இலை, தழைகளில் இருந்து உறிஞ்சி எடுத்துக் கொள்ளுமாம். ஆனால் பெண் கொசு அசைவம். நம்மைக் கடிப்பதும் ரத்தத்தை உறிஞ்சுவதும் பெண் கொசு தான்.

தேங்காய் எண்ணெய்

தூங்கும்போது இரவு நேரங்களில் தேங்காய் எண்ணெயை உடலில் தடவிக் கொண்டு படுத்தால், கொசுக்கள் மட்டுமல்லாது, நம்மை வேறு எந்த பூச்சிகளும் கடிக்காது.

பெண்களுக்கு

கொசுக்களைப் பெண்களுக்குத் தான் ரொம்பப் பிடிக்குமாம். ஆம். பெண்களின் உடலில் இருக்கின்ற ஈஸ்ட்ரஜோன்கள் தான் கொசுக்களையும் கூட கவர்ந்திழுக்கிறதாம்.

வைட்டமின் பி

கிட்டதட்ட வைட்டமின் பி தான் கொசுக்களுக்கு மிகச்சிறந்த எதிரியாம். ஆமாங்க. வைட்டமின் பி அதிகமாக உள்ளவர்களிடம் கொசுக்கள் நெருங்கவே நெருங்காதாம். இனிமேல் வைட்டமின் பி அதிகமா இருக்கிற உணவுகளை நிறைய சாப்பிடுங்க… கொசுவிடமிருந்து தப்பிச்சிக்கோங்க!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒரே ஒரு புகைப்படத்தில் ஒட்டுமொத்த நோய்களுக்கும் தீர்வு! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்!
Next articleசாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்து வந்த குடும்பம்! இளைஞன் செய்த நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டு!