கவர்ச்சி ஆடையணிந்து தன் நண்பர்களுடன் பழகக் கூறும் கணவர்!எனது வாழ்வில் நான் அன்று..

0

அன்புடையீர் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்! மாடர்ன் என்ற மாயையில் விழுந்த கணவனின் மோகத்திற்கு தினம், தினம் பலியாகிக் கொண்டிருக்கும் மனிதி நான். பொள்ளாச்சியில் இருந்து சில மைல் தூரத்தில் அமைந்திருக்கிறது எனது ஊர்.

இன்னும் பிளாட்டுகளுக்கு இரையாகிடாத, விவசாயம் நிறைந்திருக்கும் பூமியில் பிறந்து, வளர்ந்தவள் நான். சுற்றிலும் மலை, தென்னந்தோப்பு என என் நாட்களில் திரும்பிய பக்கமெல்லாம் பச்சைப்பசேல் என்ற போர்வை போர்த்தியது போல தான் இயற்கை காட்சிகளை கண்டுள்ளேன்.

தாய் மொழி தமிழிலேயே பள்ளி முழுக்க பாடம் கற்றவள். எனக்கு எப்போதுமே ஆங்கிலத்தில் எழுத தயக்கமும் இல்லை, அச்சமும் இல்லை. ஆனால், பேசுவதென்றால் தான் உடல் மொத்தமும் நடுங்கும். முகத்தில் வியர்த்துக் கொட்டும்.

ஆங்கிலம் எனது கௌரவம் அல்ல, வெறும் மொழி கருவி என ஆசிரியர் கற்பித்த வார்த்தைகளை முழுமையாக வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டவள் நான். இந்த ஆங்கிலமும், மாடர்னும் எனது கல்லூரி காலங்களில் கூட என்னை பெரிதாய் பாதித்திடவில்லை. எப்படியோ கல்லூரியை தாண்டி வந்தாயிற்று. இனிமேல் என்ன என்றிருந்த எனக்கு அப்போது தான் பேரதிர்ச்சி காத்திருந்தது….

திருமணம்! என் வீட்டில் நான் கல்லூரி பயின்று வந்த நாளில் இருந்தே எனக்கு மாப்பிள்ளை தேடி வந்தனர். எனது அதிர்ஷ்டம் அப்போது ஜாதகம் சேரவில்லை என பெரும்பாலான வரன்கள் தட்டிக் கழிந்தன. ஆனால், கல்லூரி முடிந்த ஆறே மாதத்தில் ஒரு நல்ல ஜாதகம் ஒத்துப் போனது. மாப்பிள்ளை சென்னை. கைநிறைய சம்பளம். எங்க ஊரை சேர்ந்தவர் தான். ஆயினும், சென்னையில் செட்டிலாகிவிட்டார்.

எல்லோருக்கும் பிடித்தது! பெற்றோர், உறவினர்கள், அக்கம்பக்கத்து வீட்டார் என அனைவருக்கும் மாப்பிளையை பிடித்தது. மாநிறம் தான் எனிலும், பார்க்க ஆஜானுபாகுவான உடல் தோற்றம் கொண்டிருந்தார். எனக்கும் அவரை மிகவும் பிடித்திருந்தது. ஒரு நாள் அவர் குடுமபத்துடன் பெண் பார்க்க வந்தார். அவர் வீட்டாருக்கும் எங்கள் வீட்டை பிடித்திருக்க. ஓரிரு மாதங்களில் நல்ல நாள் பார்த்து திருமண தேதி முடிவு செய்துவிடலாம் என பேசி முடித்தனர். விறைப்பு தன்மை பிரச்சனையா? மனைவி கர்ப்பமடைய இந்த முறையை டிரை செய்யுங்க! தொப்பையை குறைக்கும் 10 அற்புதமான மூலிகைகள்!! பாதுஷா கச்சிதமா வீட்டிலேயே செய்வது எப்படி? இதை ட்ரை பண்ணிப் பாருங்க!!- பொங்கல் ஸ்பெஷல்

மூன்றே மாதத்தில்… பெண் பார்த்து சென்ற மூன்று மாதத்தில் திருமண நாள் தேர்வு செய்தனர். எங்க ஊரிலேயே திருமணம் சிம்பிளாக முடிந்தது. சென்னையில் அவரது நண்பர்கள் மற்றும் அலுவலகத்தின் உடன் பணிபுரிவோர் வசதிக்காக இன்னொரு முறை திருமண வரவேற்ப்பு வைத்துக் கொள்ளலாம் என்றார். வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர்.

முதல் முறை… அதே போல, திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் சென்னை பிராயணம் மேற்கொண்டோம். அவரது நண்பர்களுக்காக மிக விமர்சையாக திருமணம் வரவேற்ப்பு ஏற்பாடு செய்திருந்தார். படங்களில் அல்லாமல், அன்று தான் என் வாழ்வில் அத்தனை பேரை அப்படி ஒரு ஃபேஷன் உடைகளில் நேரில் கண்டேன்.

இன்றைக்கு மட்டும் தான் போல… சரி! திருமண வரவேற்ப்பு என்பதால் இத்தனை மேக்கப், ஸ்டைலிஷ் உடைகளில் வந்துள்ளனர் என எண்ணின்னேன். ஆனால், என் எண்ணம் தவறானது. என் கணவரின் தோழர்கள், தோழிகள் வெளியே போனாலே அப்படி தான் வருவார்கள் போல. ஓரிரு நண்பர்களின் திருமண விருந்தை ஏற்க சென்ற போது தான் சிலபல விபரீதங்களை காண நேரிட்டது.

மேக்கப், ஸ்டைலிங்! என் ஊரிலே அனைவரும் என்னை கண்டு பொறாமைப்பட முக்கிய காரணமாக இருந்தது எனது கூந்தல் தான். மிகவும் நீண்ட அடர்த்தியான கூந்தல். சிலசமயங்களில் என் அம்மா யாரு கண்ணு பட்டுச்சோ என கூந்தலுக்கு மட்டும் திருஷ்டி சுற்றிப்போட்ட நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறியுள்ளது. எனக்கும் என் கூந்தல் மீது அளவுக் கடந்த ஈர்ப்பு இருந்தது.

கட்! நண்பர்களின் திருமண விருந்தை ஏற்க போகும் முன்னர் என் கணவர் செய்த முதல் காரியம், ஒரு பியூட்டி பார்லர் அழைத்து சென்று முடியை கத்திரித்தது தான். ஓரிரு நாட்கள் என் கண்களில் ஈரம் காயவில்லை. கண்ணாடி முன்பு நிற்கவே எனக்கு கூச்சமாக இருந்தது. ஆனால், அவரோ இதுக்கு ஏன் அழுற… முடி தான என சிம்பிளாக கூறி சென்றுவிட்டார்.

மாடர்ன் உடைகள்! நான் அறிந்த பெரிய மாடர்ன் உடை சுடிதார் வகைகள் தான். பேச்சுக்கு கூட பேன்ட் அணிந்தது இல்லை. ஆனால், முழங்கால் தெரியும் அளவிற்கும், தொடை தெரியும் அளவிற்கும் உடைகளை வாங்கிக் கொடுத்து இப்படி தான் நீ வெளியே வந்தாலோ, என் நண்பர்கள் வீட்டுக்கு வந்தாலோ உடை அணிய வேண்டும். மாடர்னாக இருக்க கற்றுகொள் என கூறி, எனது கூச்சங்களையும், வெட்கத்தையும் அறுத்தெறிய கூறினார். இதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

கதி! ஆனால், என் கதி, அப்படியான உடை அணிந்து தான்.. அவரது நண்பர்கள், தோழிகள் முன் நான் காட்சியளிக்க வேண்டும். ஒவ்வொரு முறை அந்த உடையை அணியும் போதும், எப்போது வீடு திரும்புவோம், எப்போது இதை கழற்றி ஏறிய முடியும் என்ற எண்ணம் மட்டும் என்னுள் ஓடும்.

சோஷியலிசம்!
கைகுலுக்குவதை தவிர வேறு எந்த வகையிலும் வேறு நபர்களை நான் என்னை தீண்ட அனுமதித்தது இல்லை. ஆனால், சோஷியலிசம் என்ற பெயரில், ஆண்களும், பெண்களும் கட்டிப் பிடித்துக் கொள்வதை தவறென கூறவில்லை. ஆனால், அதை என்னால் ஏற்க முடியவில்லை என்பது எனது பெரும் கவலை.

மாடர்ன் கல்ச்சர்! தோள் மீதும், இடை மீதும் கைப்போட்டு செல்ஃபீ எடுத்துக் கொள்வதெல்லாம் நான் அறியாத கலாச்சாரம்.நான் கண்ட வளர்ந்த கலாச்சாரம் வேறு, இன்று ஏற்றுக் கொள்ள தயங்கும் கலாச்சாரம் வேறு. இதை கிராமம், நகரம் என பிரித்துப் பார்க்க முடியவில்லை. நகரமாக இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு பிடிக்காமல் இவற்றை செய்வது சரியான காரியம் அல்ல.

சண்டைகள்! என் கணவர் கூறுவது போல மேக்கப், ஸ்டைல் மற்றும் உடைகள் அணிந்துக் கொள்ளவில்லை எனில் வீட்டில் சண்டை வெடிக்கும். ஆகையால், அவர் சொல்வதை எல்லாம் கேட்கும் ஒரு பொம்மை போல தான் நான் வாழ்ந்து வருகிறேன். ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை… ஒரு வார காலம் சொந்த ஊருக்கு தவறாமல் போய்வருவோம். அந்த நாட்கள் தான் என்னுடைய சொர்க்கமான நாட்கள். எனக்கு பிடித்த மாதிரி உடை அணிந்து நிம்மதியாக வாழ முடியும்.

ஃபேஷன் தான் வாழ்க்கையா… நானறிந்த வரை, அந்தந்த ஊரில், அவரவர் கால சூழலுக்கு ஏற்ப உடை அணிவது தான் ஃபேஷன். ஆனால், காலப் போக்கில், அந்த நாட்டவர் அணியும் உடை நன்றாக இருக்கிறது என நாமும் அணிவது எந்த மாதிரியான அணுகுமுறை? அவன் உடலுக்கும், உணர்வுக்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்ப அவன் உடை உடுத்துகிறான், உணவு உட்கொள்கிறான்.

வெள்ளை, கருப்பு!?
இதை நாமும் ஏற்பதால் தான் கலாச்சாரமும் கெட்டுவிட்டது, உடல் ஆரோக்கியமும் கெட்டுவிட்டது. வெள்ளையாக இருக்கும் ஒரு தம்பதிக்கு வெள்ளையாக, அழகாக குழந்தை பிறந்துள்ளது என கருப்பாக இருக்கும் ஒரு தம்பதி அதே போல வெள்ளை நிற குழந்தை பெற்றுக் கொள்வது எப்படியான ஆசையாக இருக்கும்? அப்படியான ஆசையாக தான் இருக்கிறது நமது கலாச்சார மாற்றங்கள்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெற்ற குழந்தையை மோசமாக தாக்கும் தாய்! இப்படியும் ஓர் இராட்சசியா வீடியோ இணைப்பு!
Next articleவேறொருவர் மனைவியுடன் உறவில் இருக்கும் என் கணவர் – நான் என்ன செய்ய..